நைஜீரியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் நீதிமன்றில் முன்னிலையாக்கப்படவுள்ளனர்

by

நைஜீரியா கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 7 இலங்கையர்கள் உட்பட்ட 46 வெளிநாட்டவர்கள் மீது விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

இவர்கள் நைஜீரியா கடற்பகுதியில் எரிபொருள் திருட்டில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவர்கள் கடந்த டிசம்பரில் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த பெப்ரவரி மாதம் வரையில் எரிபொருள் திருட்டில் ஈடுபட்ட 12 கப்பல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதில் இலங்கையின் இரண்டு கப்பல்களும் உள்ளடங்கியுள்ளன.

இந்த கப்பல்கள் யாவும் மொரோக்கோவில் இருந்து நைஜீரியாவுக்கு வந்த கப்பல்கள் என்று தெரியவந்துள்ளது.

இவர்கள் அனைவரும் நைஜீரியாவின் பொருளாதார குற்றம் தொடர்பான ஆணைக்குழுவில் கையளிக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.