தேசிய கீதத்தில் விடுதலைப்புலிகளை பற்றி எதுவும் பாடவில்லை : அப்துல்லா மஃறூப்

by

தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மாத்திரமே பாடினார்கள். நாங்கள் தேசிய கீதத்தில் விடுதலைப் புலிகளை பற்றியோ ஈழத்தை பற்றியோ பாடவில்லை.ஸ்ரீலங்கா தாயே என்றே நாட்டுப் பற்றுடன் பாடுகின்றோம் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் தெரிவித்துள்ளார்.

தம்பலகாமம், முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரியில் இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வில் இன்று பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

இஸ்லாமிய ஷரியா சட்டத்தை நடைமுறைப்படுத்தவும், அடிப்படை உரிமைகளை கொண்டு செல்லவும் அண்மையில் பௌத்த பிக்கு மிக மோசமாக, அடாவடித்தனமாக நாடாளுமன்றத்தில் எமது இஸ்லாமிய கொள்கைகளை நசுக்க நினைத்து செயற்படுத்திக்கொள்கின்றார்.எமது உரிமை இவ்வாறு மறுக்கப்படுகிறது.

ஷரியா சட்டம் 1952 ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டம் சிங்களம், தமிழ் மொழிகள் ஆட்சி அதிகார மொழிகளாகும். இந்த நாட்டில் 35 வீதமான தமிழ் பேசுபவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவ்வாறாக மொழி உரிமை இப்போதே மறுக்கப்படுகிறது. கடந்த 04ஆம் திகதியே இது மறுக்கப்பட்டது.

தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மாத்திரமே பாடினார்கள், நாங்கள் தேசிய கீதத்தில் விடுதலைப் புலிகளை பற்றியோ ஈழத்தை பற்றியோ பாடவில்லை.ஸ்ரீலங்கா தாயே என்றே நாட்டுப் பற்றுடன் பாடுகிறோம்.

தமிழ் மொழிக்கான அங்கீகாரத்தை மழுங்கடிக்கச் செய்யும் இவர்களால், நாளைய நமது சமூகத்தின் ஏனைய உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப்படப் போகிறதோ என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

இனவாதப்போக்குகளை மீண்டும் கொண்டு வந்து சிறுபான்மை சமூகத்தை அடக்கி ஒடுக்க நினைக்கிறார்கள். 18 திருத்தங்களில் 18ஆவது யாப்பின் திருத்தத்தில் பௌத்த மதங்களும் ஏனைய மதங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என சுட்டிகாட்டும் அதே நேரம் மொழிகளை பற்றி பிரித்து பேசப்படவில்லை.

சமமான முறையில் எங்களது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் இதற்காக எதிர்காலத்தில் எம்மை பாதுகாக்கக் கூடிய தலைமைகளை தெரிவு செய்ய வேண்டும்.

முஸ்லிம்களின் பர்தாவை பற்றி,ஷரியாவை பற்றி,மத அனுஷ்டானங்களை அரபி மொழியை பற்றியெல்லாம் பேசினார்கள். இவ்வாறாக இனக்குரோதங்களை வளர்க்கும் நோக்கில் நாடாளுமன்றத்தில் தனி நபர் பிரேரணையாக முஸ்லிம் விவாக சட்டம் தொடர்பில்அதுரலிய தேரர் கொண்டு வந்தார்.

இதை ஆளுங்கட்சி, எதிர் கட்சி என்பன கூட்டாக கொண்டு வரவில்லை தனி நபர் பிரேரனை கடந்த 1952 ல் கொண்டு வந்த முஸ்லிம் விவாக சட்டம் ஏகமானதாக அங்கீகரிக்கப்பட்டே கொண்டு வரப்பட்டது.

இதை விடுத்து அடாவடித்தனங்களுடன் போலி வேசம் போட்டு தனிநபர் பிரேரணையை கொண்டு வருகிறார்கள்.

21,22 ஆவது திருத்தம் தொடர்பிலும் விஜேதாச ராஜபக்ச மற்றொரு பிரேரணை இவரது பிரேரணையால் இந்த மாவட்ட எம்.பிக்கள் மாத்திரமல்ல சிறுபான்மை சமூகத்தின்பிரதிநிதித்துவத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.

தேசிய கீதத்தையே சிங்கள மொழியில் பாட வேண்டும் எனக் கூறுகிறார்கள். இதில் தமிழ்மொழி மறுக்கப்படுகிறது. எதிர் காலத்தில் சிறுபான்மை சமூகத்தின் உரிமைக்காக போராட வேண்டிய தலைவர்களையும், பிரதிநிதிகளையும் தெரிவு செய்யுங்கள் என்றும் கூறியுள்ளார்.