புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தியாகிகளுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன்; அவர்களின் தியாகத்துக்கு இந்தியா என்றும் நன்றியுடன் இருக்கும்: அமித்ஷா
டெல்லி: புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தியாகிகளுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். நமது தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக மிக உயர்ந்த தியாகம் செய்த நமது துணிச்சலான இதயங்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் இந்தியா எப்போதும் நன்றியுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது; டெல்லியில் நடைபெற்ற தனியார் தொலைகாட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமித் ஷாவிடம் டெல்லி சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், தேர்தல் பரப்புரையின்போது, ஷாஹின்பாக் எதிர்ப்பாளர்களை சுட்டுக் கொல்ல வேண்டும் என பாஜக தலைவர்கள் பேசியிருக்க கூடாது என தெரிவித்தார். அதேபோல், அரவிந்த் கெஜ்ரிவாலை பயங்கரவாதி எனவும் பாஜக தலைவர்கள் கூறினர். இதுபோன்ற கருத்துக்களை பாஜக தலைவர்கள் கூறியிருக்கக் கூடாது, ஏனென்றால் இதுவே பாஜகவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் பாஜகவை டெல்லி மக்கள் ஒதுக்கிவிடவில்லை எனவும் தெரிவித்தார். தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை வைத்து மக்கள் பாஜகவை ஒதுக்கிவிட்டதாகக் கூறுவதை ஏற்க முடியாது என்றார். மேலும் நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் மூன்றாம் இடைத்தையே பிடித்ததாகவும், அதனால் மக்கள் அவர்களை ஒதுக்கிவிட்டதாக கருத முடியாது எனவும் தெரிவித்தார். தேர்தல் தோல்விகளால் நாங்கள் மக்களைவிட்டு வெகு தூரத்தில் செல்லவில்லை எனவும் தங்கள் கருத்தியலை மாற்றவில்லை எனவும் கூறினார்.