மிட்டாய் வாங்கி தருவதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை – இளைஞர் போக்சோவில் கைது – மின்முரசு
திருத்துறைப்பூண்டி அருகே நான்கரை வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார் (24). இவர் தனியார் மருந்தகத்தில் பணியாற்றி பின்னர் பல்வேறு வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று (ஜனவரி 30 ) மாலை தினேஷ் குமார் அவர் வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நான்கரை வயது சிறுமியை மிட்டாய் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி மறைவான இடத்திற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
அங்கு வைத்து சிறுமிக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக தெரிகிறது. விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை காணவில்லை என அவரது தாய் தேடியுள்ளார். அப்போது தினேஷ் குமார் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய், சிறுமியை மீட்டு சென்றார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி தினேஷ் குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai
Sneha Suresh
Post navigation
மீண்டும் கவர்ச்சியில் இறங்கிய எமி ஜாக்சன் – மிகுதியாகப் பகிரப்படும் புதிய புகைப்படம்மைனர் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய அதிமுக பெண் பிரமுகர் உட்பட 2 பேர் கைது: ஆம்பூர் மகளிர் காவல் துறையினர் விசாரணை
Related Posts
![https://www.minmurasu.com/wp-content/uploads/2020/02/202002010317567214_Permission-to-Consecrate-Tamil-and-Sanskrit-in-thanjavur_SECVPF.gif https://www.minmurasu.com/wp-content/uploads/2020/02/202002010317567214_Permission-to-Consecrate-Tamil-and-Sanskrit-in-thanjavur_SECVPF.gif](https://www.minmurasu.com/wp-content/uploads/2020/02/202002010317567214_Permission-to-Consecrate-Tamil-and-Sanskrit-in-thanjavur_SECVPF.gif)
தஞ்சை கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்த அனுமதி – மதுரை உயர்நீதிநீதி மன்றம் தீர்ப்பு
![https://www.minmurasu.com/wp-content/uploads/2020/02/2-696x500.jpg https://www.minmurasu.com/wp-content/uploads/2020/02/2-696x500.jpg](https://www.minmurasu.com/wp-content/uploads/2020/02/2-696x500.jpg)
மடியை நனைக்கும் நதியே…6 நிமிட வாசிப்பு“பச்ச உடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லு… பிள்ளைக்குத் தாய்ப்பாலத் தூக்கிக் கொடுக்கச்சொல்லு” என்று கிழக்குச…
murugan Feb 1, 2020Feb 1, 2020 0 comment
![https://www.minmurasu.com/wp-content/uploads/2020/02/1-696x500.jpg https://www.minmurasu.com/wp-content/uploads/2020/02/1-696x500.jpg](https://www.minmurasu.com/wp-content/uploads/2020/02/1-696x500.jpg)