
தனுஷின் கர்ணன் படத்தில் நடிக்கும் கெளரி
by DINபரியேறும் பெருமாள் படத்தை இயக்கிக் கவனம் பெற்ற இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் தனுஷ்.
தாணு தயாரிக்கும் இந்தப் படமும் தனது முதல் படம் போல முக்கியமான பிரச்னையைப் பேசும் என மாரி செல்வராஜ் கூறியுள்ளார். இப்படத்துக்கு கர்ணன் எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கர்ணன் படத்தில் 96-ல் நடித்த கெளரி கிஷன் நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.