கரோனா வைரஸ் சர்வதேச அவசர நிலை; பயணம், வர்த்தகத்துக்குப் பிரச்னையில்லை: டபிள்யூஎச்ஓ
by DINகரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை என்று ஐ.நா.வுக்கான சீனாவின் நிரந்திரப் பிரிதிநிதி ஜங் ஜுன் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கரோனா வைரஸ் பாதிப்பு சர்வதேச பொதுச் சுகாதார அவசர நிலை என்று உலக சுகாதார அமைப்பின் பொதுச் செயலர் டெட்ரஸ் அறிவித்தார். அதேசமயம், தற்போதைய சூழல் காரணமாக பயணம் மற்றும் வர்த்தகத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்போவதில்லை என்றும் அவர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது குறிப்பிட்டார்.
இவ்வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை சீனா மிகவும் வேகமாக மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையுடன் சீனா நடந்து கொள்வதும், கரோனா வைரஸின் மரபுத் தகவலை பிற நாடுகளுடன் பகிர்ந்து கொண்டதும் பாராட்டுக்குரியது.
இது, மக்களின் உடல்நலம் விலைமதிப்பற்றது, அதனைப் பேணிக்காக்க வேண்டும் என்பதை சீனா நன்கு அறிந்து வைத்துள்ளதைக் காட்டுவதுடன் சர்வதேச அளவில் இது பரவிவிடக்கூடாது என்பதற்காக உறுதியான ஆதரவையும் வெளிக்காட்டி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்பு, 2009ஆம் ஆண்டு எச்1என்1 காய்ச்சல், 2014ஆம் ஆண்டு இளம்பிள்ளை வாத நோய், 2014ஆம் ஆண்டு மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா, 2016ஆம் ஆண்டு சாய்கா மற்றும் 2018ஆம் ஆண்டு காங்கோ குடியரசில் எபோலா ஆகியவற்றுக்காக மொத்தம் 5 தடவை சர்வதேச பொதுச் சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது என்பதைக் கவனித்துள்ளோம்.
தற்போது, கரோனா வைரஸ் பரவல் வேகமாக உள்ளது. உலகமயமாக்கம் என்ற பின்னணியில் முக்கிய சர்வதேச சுகாதார அவசரநிலையில் நாடுகளுக்கிடையில் எல்லையில்லை. பொது அபாயத்தை எதிர்நோக்கும் போது, சர்வதேசச் சமூகம் ஒன்றிணைந்து இன்னல்களைக் கூட்டாகச் சமாளிக்க வேண்டும். சீன அரசு தொடர்ந்து பொறுப்புணர்ச்சியுடன் பயன் தரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
தகவல், சீன ஊடகக் குழுமம்