https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/8/original/Nirbhaya_case_convicts.jpg

நிர்பயா குற்றவாளிகளுக்கு மரண தண்டனை மீண்டும் ஒத்திவைப்பு: தில்லி நீதிமன்றம்

by

புது தில்லி: நிர்பயா குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை மீண்டும் ஒத்திவைத்து தில்லி கீழமை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நிர்பயா குற்றவாளிகள் நால்வரையும் தூக்கிலிட சரியாக 11 மணி நேரம் 55 நிமிடங்கள் இருந்த நிலையில் தூக்கிலிடுவதை ஒத்திவைத்து இரண்டாவது முறையாக தில்லி கீழமை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிப்ரவரி 1ம் தேதி சனிக்கிழமை காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், மறு உத்தரவு வரும் வரை குற்றவாளிகளை தூக்கிலிட தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிப்ரவரி 1ம் தேதி தங்களுக்கு நிறைவேற்றப்பட உள்ள தூக்கு தண்டனையை ஒத்திவைக்கக் கோரி குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தில்லி கீழமை நீதிமன்ற கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேந்தர் ராணா, தூக்கு தண்டனையை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!