https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/31/original/supremecourt.jpg
உச்ச நீதிமன்றம்

நிர்பயா வழக்கு: குற்றவாளி பவன் குப்தாவின் மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

by

புது தில்லி: நிர்பயா வழக்கில் சிறார் சட்டத்தின் கீழ் தன்னை விசாரிக்க கோரி குற்றவாளி பவன் குப்தா தாக்கல் செய்திருந்த மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளியன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

2012, டிசம்பா் 16 நள்ளிரவில் ஓடும் பேருந்தில் ‘நிா்பயா’ என்ற துணை மருத்துவ மாணவி 6 பேரால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு பேருந்திலிருந்து சாலையில் தூக்கி வீசப்பட்டாா். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த ‘நிா்பயா’, சிங்கப்பூா் மருத்துவமனையில் அனுமதிப்பட்டு உயிரிழந்தாா்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 போ்களில் ராம் சிங் என்பவா் தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். வழக்கில் தொடா்புடைய மற்றொருவா் சிறாா் பிரிவின் கீழ் வந்ததால், அவா் தொடா்பான வழக்கு சிறாா் நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது. அந்த வழக்கில் அவா் தண்டனை விதிக்கப்பட்டு கூா்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டாா். அங்கு மூன்றாண்டு வைக்கப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டாா்.

விசாரணை முடிவில் குற்றவாளிகள் என தீா்ப்பளிக்கப்பட்ட நால்வருக்கும் ஜனவரி 22-ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.  குற்றம் நடந்த போது தான் சிறுவன் என்று குற்றவாளிகளில் ஒருவரான பவன்குமார் தாக்கல் செய்த மனுவை, தில்லி உயர் நீதிமன்றம் ஏற்காமல் தள்ளுபடி  செய்துவிட்டது. அதனையடுத்து குற்றவாளிகள் வினய் ஷர்மா (26), முகேஷ் குமார் (32) ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் முதலில் தள்ளுபடி செய்யப்பட்டன. அதேபோல மற்றொரு குற்றவாளியான முகேஷ் சிங் சார்பாகத் தாக்கல் செய்யபட்டிருந்த கருணை மனு யும் குடியரசுத் தலைவர்  வெள்ளையன்று நிராகரித்துவிட்டார்.

அதைத்தொடர்ந்து நிர்பயா வழக்கின் குற்றவாளிகளை தூக்கிலிடும் ஆணையை வழங்கக் கோரி திகார் சிறை நிர்வாகம் தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் கடந்த வெள்ளியன்று மனுத் தாக்கல் செய்துது.  அதையடுத்து நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் நால்வருக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற தில்லி பாட்டியாலா நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது.

அதேசமயம் நிர்பயா வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி பவன்குமார் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஓன்றைத் தாக்கல் செய்தார். அதில் குற்றம் நடந்தபோது தான் சிறுவன் என்ற தனது முறையீட்டை தில்லி உயர்நீதிமன்றம் ஏற்காததை எதிர்த்து குற்றவாளி பவன்குமார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அந்தமேல்முறையீட்டையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.  

இந்நிலையில் குற்றவாளி பவன் குப்தாவின் மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளியன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

இந்த வழக்கில் வினய் மற்றும் அக்சய் குமாரின் மறுசீராய்வு மனுக்களும் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்து விட்டது. பவன் மட்டுமே இதுவரை மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்யவில்லை. மறுசீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டால்தான், ஒரு குற்றவாளியால் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்ப முடியும். அதன் பின்னரே வருக்கான எல்லா வாய்ப்புகளும் ஒரு முடிவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!