
பலன் தரும் ஸ்லோகம் (ஆபத்துகள் நீங்க ஆறுமுகன் துதி...)
தேவாதி தேவனுதே தேவகணாதிநாத
தேவேந்த்ர வந்த்யம்ருத பங்கஜமஞ்சுபாதா
தேவரிஷி நாரதமுனீந்த்ர சுகிர்த கீர்த்தி
வல்லீசநாத மம தேஹி கராவலம்பம்.
பொதுப்பொருள்: தேவர்கள் அனைவரிலும் உயர்வான பெருமை கொண்டவரை, வணங்குகிறேன். தேவர்கள் அனைவருக்கும் தலைவரே, தேவேந்திரன் உட்பட அனைவரும் வணங்கிப் பணிந்திடும் பெருமை கொண்டவரே, குறவள்ளி மணாளனே, தங்கள் அபயக் கரத்தால் என் கை பற்றிக் காக்க வேண்டும், ஐயனே. (இத்துதியை தினமும் ஜபித்து வர ஆபத்துகளிலிருந்து முருகப்பெருமான் நம்மை கைதூக்கிக் காப்பாற்றுவான்.)