கறுப்பு தினம்:கூட்டமைப்பு ஆதரவு?

by
https://1.bp.blogspot.com/-TZcUu61piy8/XjRa9zV2R1I/AAAAAAAAOJ0/vGFWydwigWgChQF6BY5vckXXWSG-30ryQCNcBGAsYHQ/s1600/GOTHA-2.jpg

இலங்கையின் சுதந்திரதினமான பெப்ரவரி மாதம் நான்காம் திகதியை கறுப்பு தினமாக அனுஸ்டிக்க தாயகத்தில் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளநிலையில் அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.

நடைபெறவுள்ளது இலங்கை ஒற்றையாட்சி அரசின் எழுபத்து இரண்டாவது சுதந்திர தினக்கொண்டாட்டமாகும்.அதனை பகிஸ்கரிக்குமாறு இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கம்   சார்பில்வேண்டுகோள் விடுப்பதாக குடும்பங்கள் அறிவித்துள்ளன.

கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் பத்மநாதன் கருணாவதி தமிழ் மக்களது ஆதரவையும் புறக்கணிப்பிற்கு கோரியிருந்தார்.

இறுதிப் போரில் இலங்கைப் படையினரிடம் கையளிக்கப்பட்ட தமது பிள்ளைகள, கணவன்மார்; தொடர்பாக இலங்கை ஒற்றையாட்சி அரசு இதுவரை கவனம் செலுத்தவில்லை. இந்த நிலையில் புதிதாகப் பதவியேற்றுள்ள கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையப்படுத்தி அரசாங்கம் சுதந்திர தினத்தைக் கொண்டத்தயாராகி வரும் நிலையில் எமது எதிர்ப்பை புறக்கணிப்பின் மூலம் வெளிப்படுத்தவுள்ளதாகவும்  கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் பத்மநாதன் கருணாவதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே கூட்டமைப்பு தனது ஆதரவை வழங்க இன்று நடந்த பேச்சுக்களின் முடிவில் முன்வந்;துள்ளது