விவசாய நிலத்தில் 12 அடி நீள மலைப்பாம்பு – அலறி அடித்து ஓடிய பெண்மணி – மின்முரசு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே விவசாய நிலத்தில் 12 அடி நீள மலைபாம்பு பிடிபட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சந்திரப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் கண்மணி (35). இவருக்கு நான்கு ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. நிலத்தின் நடுவே உள்ள மண்திட்டான பகுதியில் உள்ள பாறையின் நடுவே கடந்த பத்து நாட்களுக்கு முன் சுமார் 12 அடி நீள மலைபாம்பு புகுந்து கொண்டதாக தெரிகிறது.
நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச வந்த கண்மணி, பாம்பை கண்டு அலரி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்துள்ளார். பின்னர் உறவினர்கள் உதவியோடு ஊத்தங்கரை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறை அதிகாரிகள் ஜெசிபி இயந்திர உதவியுடன் சுமார் ஒருமணி நேர போராட்டத்திற்கு பின்பு மலைப்பாம்பை பாதுகாப்பாக பிடித்து ஒன்னகறை காப்பு காட்டில் விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai
Sneha Suresh
Post navigation
“இதுவரை தமிழகத்தில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு இல்லை” – அமைச்சர் விஜயபாஸ்கர்சோளிங்கர் அடுத்த எரிவாயு உருளை வெடித்து 2 பேர் உயிரிழப்பு
Related Posts
இன்று மத்திய வரவு செலவுத் திட்டம் தாக்கல் – வருமான வரி சலுகை அறிவிப்பு வருமா?
murugan Feb 1, 2020Feb 1, 2020 0 comment