ஜிம்பாப்வேயின் முயற்சி வீண்: டிரா செய்து தொடரை கைப்பற்றியது இலங்கை – மின்முரசு

ஹராரேயில் நடைபெற்று வந்த ஜிம்பாப்வே – இலங்கை இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்ததால் இலங்கை அணி தொடரை கைப்பற்றியது.

ஜிம்பாப்வே – இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் ஹராரேயில் நடைபெற்று வந்தது. முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே 406 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை 293 ரன்னில் சுருண்டது.

முதல் இன்னிங்சில் 113 ரன்கள் முன்னிலை பெற்றதால் வெற்றி பெற்றுவிடலாம் என்ற எண்ணத்தோடு ஜிம்பாப்வே 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தின்போது மழை குறுக்கிட்டதால் ஜிம்பாப்வே அணியால் அதிக நேரம் விளையாட முடியவில்லை. நேற்றைய ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் அடித்திருந்தது.

இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. ஜிம்பாப்வே 247 ரன்கள் எடுத்த நிலையில் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. 361 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களம் இறங்கியது. ஆனால் 3-வது வீரராக களம் இறங்கிய மெண்டிஸ் சிறப்பாக விளையாடி அணியை காப்பாற்றினார்.

இலங்கை 87 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்திருக்கும்போது போட்டியை முடித்துக்கொள்ள இரு அணி கேப்டன்களும் சம்மதம் தெரிவித்தனர். இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது. மெண்டிஸ் 233 பந்துகளை சந்தித்து 116 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். முதல் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றிருந்ததால் தொடரை 1-0 எனக் கைப்பற்றியுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

https://secure.gravatar.com/avatar/47e80d94693a8df7e4727c7c1c8b1056?s=100&d=mm&r=g

Ilayaraja

Post navigation

U19 உலக கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறிய பாகிஸ்தான்- இந்தியாவுடன் பலப்பரீட்சைபுதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் தோல்வி: வங்கிகள் வேலைநிறுத்தம் 10 லட்சம் ஊழியர் பங்கேற்பு

Related Posts

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/02/nirmala-sitaraman23344-1580525585.jpg

இது தான் சூப்பர் வரவு செலவுத் திட்டம்.. நிர்மலா சீதாராமன் இதைதான் செய்யப்போகிறாரா..?

murugan Feb 1, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/02/paddy232-1580524159-1.jpg

2 மெகா விவசாயத் திட்டங்கள்: வரவு செலவுத் திட்டம் 2020

murugan Feb 1, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/02/g_arrow-1.jpg

ஒரே நாளில் 45 பேர் மரணம்.. 11,000 பேருக்கு பாதிப்பு.. சீனாவில் தீவிரம் அடைந்த கொரோனா.. அதிர்ச்சி!

vikram Feb 1, 2020Feb 1, 2020 0 comment