தமிழகத்திற்கு தடையில்லாமல் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது: மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி
நாமக்கல்: தமிழகத்திற்கு தடையில்லாமல் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கோடைக்காலம் துவங்கவுள்ள நிலையில் நாள் தோறும் 15,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார்.