https://s3.amazonaws.com/adaderanatamil/1580466314-arrest-2.jpg

எட்டு இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடல் எல்லைக்குள் நேற்று (30) அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என சந்தேகிக்கப்படும் 8 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்கள் என கடல்வள நீரியல் திணைக்கள அதிகாரி திரு.செனவிரத்ன தெரிவித்தார்.

கடந்த 27 திகதி இந்தியாவின் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து புறப்பட்ட மீனவர்களே இவ்வாறு கைசெய்யப்படுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கைசெய்யப்பட்டவர்கள் இராமநாதபுரம் மற்றும் நாகப்பட்டனம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் முறையே 60, 54, 42, 35, 35, வயதுடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களின் படகு மற்றும் வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களையும் கைப்பற்றப்பட்ட மீன்பிடி உபகரணங்களையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடல்வள நீரியல் திணைக்கள அதிகாரி தெரிவித்தார்.

-திருகோணமலை நிருபர் கீத்-