திடீர் திருப்பம்: நிர்பயா கொலை குற்றவாளிகளை நாளை தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் தடை! – மின்முரசு
டெல்லி: நிர்பயா கொலை வழக்கின் குற்றவாளிகளை நாளை தூக்கிலிடுவதற்கு டெல்லி நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது.
நாட்டை உலுக்கிய நிர்பயா கொலை வழக்கில் 3 குற்றவளிகளுக்கு நாளை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. இதற்காக டெல்லி திகார் சிறையில் ஒத்திகையும் பார்க்கப்பட்டது.
டெல்லி திகார் சிறையில் நாளை காலை 6 மணிக்கு இத்தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. பவன் குப்தா என்ற குற்றவாளி, தாம் குற்றம் நடந்த போது மைனர் என்பதால் தூக்கு தண்டனை விதிக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை இன்று உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இந்நிலையில் டெல்லி நீதிமன்றத்தில் எஞ்சிய 3 குற்றவாளிகளும் தங்களுக்கு தூக்கு தண்டனையை நாளை நிறைவேற்ற தடை கோரி மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இம்மனுக்கள் மீது இன்று நடைபெற்ற விசாரணையில் 3 குற்றவாளிகள் மட்டும் நாளை தூக்கிலிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் டெலி நீதிமன்றமோ, ஒரே வழக்கில் வெவ்வேறு நாட்களில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற கூடாது; ஆகையால் மறு உத்தரவு வரும் வரை நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட தடை விதிப்பதாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
நிர்பயா வழக்கில் 2-வது முறையாக குற்றவாளிகளின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Source: OneIndia
vikram
Post navigation
தமிழக மீனவர்கள் 8 பேருக்கு பிப்.12 வரை நீதிமன்ற காவல்‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ கோஷம் பொய்யா? திமுக, அதிமுக செய்தது சரிதான்.. பாஜக ‘அங்கீகாரம்’
Related Posts

ஏப்ரல் முதல் கல்லெண்ணெய், டீசல் விலை ஒரு ரூபாய் வரை உயரும்
murugan Feb 1, 2020Feb 1, 2020 0 comment

சீனா சென்ற இந்திய விமானம் சற்றுமுன் அங்கிருந்து கிளம்பியது..!!
Kundralan M Feb 1, 2020Feb 1, 2020 0 comment
