உதயநிதி தன் கட்சி தொண்டனுக்கு பச்சை துரோகம் பண்ணுறார்! நல்ல ரேட் வந்தா இளைஞரணியை வித்துடுவார் போல!: – மின்முரசு
ஆணியடிக்கும் அ.தி.மு.க. உதயநிதி ஸ்டாலின் எந்த நேரத்தில் அப்படியொரு பேட்டியை கொடுத்தாரோ, ச்சும்மா வெச்சு செய்கிறார்கள் வலைதளங்களில் அவரை. ’ஹலோ உதய் கட்சி நடத்துறீங்களா இல்லை கம்பெனியா? நல்ல ரேட் வந்தா உங்க இளைஞரணியை வித்துட்டு போயிட்டே இருப்பீங்க போல இருக்கே!’ என்றெல்லாம் கன்னாபின்னாவென கிண்டலடித்து தாளிக்கிறார்கள். அப்படி என்னாதான் பேசிட்டார் உதயநிதி?….குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு எதிரான தி.மு.க.வின் பேரணி! மற்றும் துக்ளக் விழா! இரண்டிலும் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்களும், பேசிய பேச்சும் தி.மு.க.வை ரொம்பவே உரசிவிட்டன. இதனால் டென்ஷனான தி.மு.க.வின் இளைஞரணி மாநில செயலாளரானஉதயநிதி ஸ்டாலின்,
‘வயதானவர்! கால் நூற்றாண்டாக கால்பிடித்து காலத்தை தள்ளியவர்’ என்றெல்லாம் ரஜினியை பொளந்து கட்டினார். இதனால் பற்றி எரிந்தது விவகாரம். இந்த நிலையில்தான் கடந்த வாரம் ஒரு ஆங்கில நாளிதழுக்கு பேட்டி கொடுக்கையில் ’ சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினியின் புதிய படத்தை எனது ரெட்ஜெயண்ட் மூவீஸ் மூலமாக வெளியிடுவதில் எனக்கு எந்த பிரச்னையுமில்லை. அவருக்கு (ரஜினி) இதில் எந்த பிரச்னையுமில்லை என்றால், எனக்கு என்ன பிரச்னை இருக்கப்போகிறது?’ என்று சொல்லிவிட்டார். இதுதான் தி.மு.க. இளைஞரணியினரை தாறுமாறாக உசுப்பிவிட்டது. ‘இவரோட பேச்சை கேட்டு ரஜினிகாந்தை எங்களோட பரம எதிரி மாதிரி நினைக்க துவங்கிட்டோம். இந்த நேரத்துல இவரு இப்படி ரஜினி கூட பிஸ்னஸ் பண்ண தயாராயிட்டாரே. அப்ப நாங்க லூஸா?’ என்று பொங்கினர். (இது குறித்து நமது ஏஸியாநெட் இணையதளம் தான் முதலில் பட்டாஸாக ஒரு செய்தி வெளியிட்டது).
![https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/udayanithi2-jpg.jpg https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/udayanithi2-jpg.jpg](https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/udayanithi2-jpg.jpg)
இந்த நிலையில் அ.தி.மு.க.வும் உதயநிதியை இதற்காக வெளுத்து வாங்க துவங்கியுள்ளது. அக்கட்சியின் இணையதள அணியின் மாநில செயலாளரான சிங்கை ராமச்சந்திரன் “காமெடிதான் போங்க தி.மு.க. ஆனாலும் உதயநிதி இப்படியொரு முடிவை எடுத்ததில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை. ஏனென்றால், கருணாநிதி, ஸ்டாலின்னு அவங்க குடும்பமே அரசியலை கமர்ஷியலா மட்டும்தான் பண்ணுவாங்க. ஆட்சியில் இருந்தப்ப, ஒரு திட்டத்தை மக்களுக்கு அறிவித்தாலும் கூட அதில் நமக்கு எவ்வலவு கமிஷன் வரும்னு கணக்குப் போட்டு, விஞ்ஞான ரீதியில் காசை அள்ளிக்கொட்டிய குடும்பம் அது. அதனாலதான் இன்னைக்கு ரஜினிக்கு கைகுலுக்க தயாராயிட்டார் பொலிடிகல் பிஸ்னஸ் மேன் உதயநிதி. இதெல்லாம் தன்னை நம்பி நிற்கும் தொண்டர்களுக்கு செய்யும் பச்சை துரோகம். எங்கள் இயக்கத்தில் அந்தப் பழக்கம் என்றுமே இருந்ததில்லை.” என்று வெளுத்திருக்கிறார்.
என்ன பண்ணப்போறீங்க மிஸ்டர். உதய்?!
Source: AsianetTamil
Kundralan M
Post navigation
கவர்ச்சியைக் காட்டி காரியத்தை முடிக்க ஸ்கெட்ச் போடும் பாஜக…!! அமளியில் இறங்கி அதகளம் செய்ய காத்திருக்கும் எதிர்க்கட்சிகள்…!!ஸ்டாலினை காப்பாற்ற நினைக்குது எடப்பாடியார் அரசு, அது கூடாது!?: போட்டுப் பொளக்கும் பா.ஜ.க. புள்ளி
Related Posts
![https://www.minmurasu.com/wp-content/uploads/2020/02/202002010317567214_Permission-to-Consecrate-Tamil-and-Sanskrit-in-thanjavur_SECVPF.gif https://www.minmurasu.com/wp-content/uploads/2020/02/202002010317567214_Permission-to-Consecrate-Tamil-and-Sanskrit-in-thanjavur_SECVPF.gif](https://www.minmurasu.com/wp-content/uploads/2020/02/202002010317567214_Permission-to-Consecrate-Tamil-and-Sanskrit-in-thanjavur_SECVPF.gif)
தஞ்சை கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்த அனுமதி – மதுரை உயர்நீதிநீதி மன்றம் தீர்ப்பு
![https://www.minmurasu.com/wp-content/uploads/2020/02/2-696x500.jpg https://www.minmurasu.com/wp-content/uploads/2020/02/2-696x500.jpg](https://www.minmurasu.com/wp-content/uploads/2020/02/2-696x500.jpg)
மடியை நனைக்கும் நதியே…6 நிமிட வாசிப்பு“பச்ச உடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லு… பிள்ளைக்குத் தாய்ப்பாலத் தூக்கிக் கொடுக்கச்சொல்லு” என்று கிழக்குச…
murugan Feb 1, 2020Feb 1, 2020 0 comment
![https://www.minmurasu.com/wp-content/uploads/2020/02/1-696x500.jpg https://www.minmurasu.com/wp-content/uploads/2020/02/1-696x500.jpg](https://www.minmurasu.com/wp-content/uploads/2020/02/1-696x500.jpg)