ஆஸ்திரேலியா ஓபன்: ஸ்வேரேவ்-ஐ வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் டொமினிக் தீம் – மின்முரசு

மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிசில் டொமினிக் தீம் ஸ்வேரேவ்-ஐ வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 2-வது அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் ஐந்தாம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் – 7-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வேரேவ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

இருவரும் முன்னணி வீரர்கள் என்பதால் ஆட்டம் தொடங்கியதில் இருந்தே பரபரப்பாக சென்றது. முதல் செட்டை ஸ்வேரேவ் 6-3 எனக் கைப்பற்றினார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 2-வது செட்டை டொமினிக் தீம் 6-4 எனக் கைப்பற்றினார்.

3-வது செட்டில் இருவரும் கடுமையாக போராடினர். ஆட்டம் சமநிலை பெற்றதால் டை-பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் 7-3 என டொமினிக் தீம் கைப்பற்றினார். 4-வது செட்டும் டை-பிரேக்கர் வரை சென்றது. இதையும் 7-4 எனக் கைப்பற்றி டொமினிக் தீம் 3-6, 6-4, 7(7)-6(3), 7(7)-6(4) என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதிப் போட்டியில் டொமினிக் தீம் – ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

Related Tags :

Source: Maalaimalar

https://secure.gravatar.com/avatar/47e80d94693a8df7e4727c7c1c8b1056?s=100&d=mm&r=g

Ilayaraja

Post navigation

‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ கோஷம் பொய்யா? திமுக, அதிமுக செய்தது சரிதான்.. பாஜக ‘அங்கீகாரம்’மேட்டுப்பாளையம் அருகே 48 நாட்கள் நடைபெற்ற யானைகள் புத்துணர்வு முகாம் நிறைவு

Related Posts

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/02/202002010317567214_Permission-to-Consecrate-Tamil-and-Sanskrit-in-thanjavur_SECVPF.gif

தஞ்சை கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்த அனுமதி – மதுரை உயர்நீதிநீதி மன்றம் தீர்ப்பு

murugan Feb 1, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/02/2-696x500.jpg

மடியை நனைக்கும் நதியே…6 நிமிட வாசிப்பு“பச்ச உடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லு… பிள்ளைக்குத் தாய்ப்பாலத் தூக்கிக் கொடுக்கச்சொல்லு” என்று கிழக்குச…

murugan Feb 1, 2020Feb 1, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/02/1-696x500.jpg

ஊடக அறம், உண்மையின் நிறம்!2 நிமிட வாசிப்புகாலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்து…

murugan Feb 1, 2020Feb 1, 2020 0 comment