http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_29_Jan_239864528179169.jpg

சீனாவில் இருந்து தமிழகம் வந்துள்ள 242 பேரும் சுகாதாரத் துறையின் நேரடி தொடர்பில் உள்ளனர்: அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை: கொரோனா வைரஸ் பரவியுள்ள சீனாவில் இருந்து இதுவரை 242 பேர் தமிழகம் வந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். 242 பேரும் சுகாதாரத் துறையின் நேரடி தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர், கொரோனா வைரஸ் குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம், அதே வேளையில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும், திருவண்ணாமலையில் பரிசோதனை செய்யப்பட்ட நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.