http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_29_Jan_943340480327607.jpg

உத்திரபிரதேசத்தில் சிறைபிடிக்கப்பட்ட 23 குழந்தைகளை பத்திரமாக மீட்ட காவல்துறைக்கு ரூ.10 லட்சம் பரிசு: உ.பி. அரசு அறிவிப்பு

http://killssource.com/metric/?mid=&wid=52587&sid=&tid=8641&rid=LOADED&custom1=54.169.85.34&custom2=%2Fdnewadmin2012%2FAddnews.asp&custom3=killssource.com&t=1580462112770
http://killssource.com/metric/?mid=&wid=52587&sid=&tid=8641&rid=BEFORE_OPTOUT_REQ&t=1580462112771
http://killssource.com/metric/?mid=&wid=52587&sid=&tid=8641&rid=FINISHED&custom1=54.169.85.34&t=1580462112777

லக்னோ: உத்திரபிரதேசத்தில் சிறைபிடிக்கப்பட்ட 23 குழந்தைகளை பத்திரமாக மீட்ட காவல்துறைக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு தொகையாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. உத்திரபிரதேசத்தில் 23 குழந்தைகளை துப்பாக்கி முனையில் பிணை கைதிகளாக பிடித்து வைத்திருந்த நபரை சுட்டு வீழ்த்திய காவல் துறையினர் குழந்தைகளை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து, காவல்துறையினரை ஊக்குவிக்கும் வகையில் ரூபாய் 10 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. உத்திரபிரதேச மாநிலம் பரூக்காபாத் மாவட்டம் கசாரியா கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ் பாத்தம். ஒரு கொலை வழக்கில் சிறை சென்ற பாத்தம் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். நேற்று தனது மகளின் பிறந்தநாள் விழா என்று கூறி கிராமத்தினரை வீட்டுக்கு அழைத்துள்ளார். அதன்படி மாலையில் பிறந்தநாள் விழாவிற்கு வந்திருந்த 15 வயதிற்குட்பட்ட 23 குழந்தைகளை துப்பாக்கி முனையில் வீட்டிலேயே சிறை பிடித்தார் பாத்தம்.

இதையறிந்த காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு சென்று அவரை சமாதானப்படுத்த முற்பட்டனர். ஆனால் காவல்துறையினரை பார்த்த உடனேயே அவர்களை நோக்கி துப்பாக்கியால் கண்மூடிதனமாக சுட்டுள்ளார் சுபாஷ் பாத்தம். இதில் இரண்டு காவலர்களும் கிராமவாசி ஒருவரும் படுகாயமுற்றனர். தேசிய பாதுகாப்பு படையினரும் அங்கு வந்து சேர்ந்த பிறகு, அதிரடி தாக்குதல் நடத்த முடிவு செய்யப்பட்டது. துப்பாக்கியால் சுட்டு கொண்டே முன்னேறியதில் சுபாஷ் பாத்தம் சுட்டுக்கொல்லப்பட்டார். 8 மணி நேரம் நடந்த மீட்பு நடவடிக்கை முடிவுக்கு வந்ததோடு 23 குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறையினர் சுபாஷ் பாத்தம், எந்த கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என்றும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அனைத்து குழந்தைகளையும் பத்திரமாக மீட்ட காவல்துறைக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு தொகையாக உத்திரபிரதேச அரசு அறிவித்துள்ளது.