https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/31/original/WhatsApp_Image_2020-01-31_at_12.jpeg

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக பிரதிநிதிகள் மாநாடு திருச்சியில் தொடக்கம்

by

திருச்சி: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு திருச்சியில் தொடங்கியது. மாநாட்டுக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார்.

https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2020/1/31/WhatsApp_Image_2020-01-31_at_12.04_.09_PM_.jpeg

துவக்க நிகழ்ச்சியாக திமுக மாநாட்டில் பெரியார், அண்ணா, மு. கருணாநிதி ஆகியோரின் படங்களுக்கு தலைவர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.

https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2020/1/31/WhatsApp_Image_2020-01-31_at_12.04_.25_PM_.jpeg

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திமுக முதன்மைச் செயலாளர் கே. என். நேரு, பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2020/1/31/WhatsApp_Image_2020-01-31_at_12.06_.07_PM_.jpeg

தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மாவட்ட ஊராட்சி வாா்டு, ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள் மற்றும் கிராம ஊராட்சித் தலைவா்கள் பங்கேற்கும் மாநாடு திருச்சி மணப்பாறை சாலையில் அமைந்துள்ள கோ் கல்லூரி வளாகத்தில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது.

https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2020/1/31/WhatsApp_Image_2020-01-31_at_12.06_.07_PM_(1)_.jpeg

நிகழ்வில் கட்சியின் முதன்மைச்  செயலாளர் கே.என்.நேரு வரவேற்றுப் பேசியது: திருச்சியில் மாநாடு நடந்தாலே அடுத்து வரும் தேர்தலில் திமுக வென்று ஆட்சிக்கு வரும்.

இப்போது உள்ளாட்சித் தேர்தல் வெற்றி மாநாடு நடக்கிறது. அடுத்து சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று, தளபதி முதல்வராவார். அந்த வெற்றிக் கூட்டமும் திருச்சியில் நடக்கும். 

https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2020/1/31/WhatsApp_Image_2020-01-31_at_12.06_.09_PM_1.jpeg

திமுக வெற்றிப்பெற்றால் உள்ளாட்சி இடங்களுக்கு குறைவான நிதி வழங்கப்படும் என்று அமைச்சர் கருப்பண்ணன் கூறியுள்ளார்.

எந்த அமைச்சருக்கும் நிதியை குறைக்கும் அதிகாரம் கிடையாது. ஒருவேளை அமைச்சர் கருப்பண்ணனுக்கு அப்படி அதிகாரம் இருந்தால், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த இடங்களுக்கு 3 மடங்கு நிதியை மு.க.ஸ்டாலின் வழங்குவார்  என்றார்.

https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2020/1/31/WhatsApp_Image_2020-01-31_at_12.06_.08_PM_(1)_.jpeg

இளைஞர் அணிச் செயலாளர் உதயந்தி ஸ்டாலின் பேசுகையில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இளைஞர் அணியினருக்கு குறைவான இடங்கள் வழங்கினாலும், அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். அடுத்துவரும் சட்டப்பேரவை தேர்தலில் இளைஞர் அணியினருக்கு அதிக அளவில் வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்றார்.

https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2020/1/31/WhatsApp_Image_2020-01-31_at_12.06_.08_PM_1.jpeg

திமுக மாநாட்டில் பங்கேற்றோர்: 
திமுக நிர்வாகிகள்.. துரைமுருகன் (பொருளாளர்), ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், டி கே எஸ். இளங்கோவன, பூண்டி கலைவாணன்.
 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!