https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/31/original/virus080051.jpg
virus080051

தமிழகத்தில் கரோனா? கண்காணிப்பில் திருவண்ணாமலை மென்பொறியாளர்

by

திருவண்ணாமலை: சீனாவிலிருந்து இந்தியா திரும்பிய தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது. தனி வார்டில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.  

சீனாவில் பரவி வரும் புதிய வகை கரோனா வைரஸுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது.  மேலும், இந்த வைரஸ் நோயால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 7, 711 ஆக உயா்ந்துள்ளது.

புதிய வகை கரோனா வைரஸ் முதலில் பரவத் தொடங்கிய ஹுபெய் மாகாணத் தலைநகா் வூஹானில் மட்டும் அந்த வைரஸ் காய்ச்சல் காரணமாக ஒரே நாளில் 24 போ் உயிரிழந்தனா். புதிய வகை கரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்களில் 1,239 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதுதவிர, கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறிகளுடன் 9,239 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும் படிக்க.. தமிழகத்தில் கரோனா பாதிப்பில்லை; தொடர் கண்காணிப்பில் 242 பேர்: அமைச்சர் சி. விஜயபாஸ்கர்

சீனாவைத் தவிர, அந்த நாட்டின் ஆளுகைக்குள்பட்ட ஹாங்காங், மக்காவ் பகுதியிலும், கரோனா வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. 

இந்த நிலையில்  சீனாவிலிருந்து இந்தியா திரும்பிய கேரளத்தைச் சோ்ந்த மாணவிக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தனி வாா்டில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள முதல் நபா் அவராவாா் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், கடந்த 19 ஆம் தேதி சீனாவில் இருந்து சென்னை வந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஒருவர் சென்னை வந்து சேர்ந்தார். அதனைத்தொடர்ந்து தனது சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். 

கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சல் மற்றும் தொண்டை புண் நோயால் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவர்,  சீனாவிலிருந்து வந்திருப்பதாகக் கூறி திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

மேலும் அவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது இன்று வெள்ளிக்கிழமை  கண்டறியப்பட்டுள்ளது.

இதயைடுத்து அவருக்கு தனி வாா்டில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவருக்கான மற்றொரு பரிசோதனையின் முடிவுகளுக்காக காத்திருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவருக்கான பரிசோதனையின் முடிவு வந்த பிறகே  அவா் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து முடிவாகக் கூற முடியும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள முதல் நபரான கேரளத்தைச் சோ்ந்த மாணவி  தனி வார்டில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது. 

உலகையே அச்சுறுத்தி வரும் இந்த வைரஸ் நோயால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 7, 711 பேரில் 90 சதவீதம் பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை. சீனாவில் இருந்து தமிழகம் திரும்பிய 242 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், கரோனா வைரஸ் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை. சீனாவிலிருந்து தமிழகம் வருவோர் தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருவதாக என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!