கொரோனா வைரஸ் தாக்கத்தை எதிர்கொள்ள தயார் நிலையில் இலங்கை

by

கொரோனா வைரஸ் தாக்கத்தை எதிர்கொள்ள இலங்கை சிறந்த தயாரிப்புக்களை கொண்டிருந்தது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

மையத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ரெய்ஸா பென்ட்ஸ் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைத்த அவர், உலக வங்கி இலங்கையின் சுகாதார அமைச்சுடன் நெருங்கிய நிலையில் செயலாற்றி வருகிறது.

இந்தநிலையில் அனர்த்த முகாமை நிலையம் அவசர நிலைகளின்போது உரிய தயார்நிலைகளை கொண்டுள்ளமையை தம்மால் உறுதிப்படுத்த முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தற்போதைய சூழ்நிலையில் உபகரணங்களைப் பொறுத்தவரை தேவையான அனைத்து கையிருப்புகளும் எங்களிடம் உள்ளன.

மருத்துவமனைகளில் தயார் நிலையில் உள்ளதா?, வெவ்வேறு இருப்புக்களைப் பார்ப்பதற்கும், எதிர்பார்க்கப்பட்ட தேவை என்ன என்பதையும், நாட்டில் உள்ளதா என்பதைப் பார்ப்பதற்கும் நாங்கள் இலங்கையின் சுகாதார அமைச்சகத்துடன் மிக நெருக்கமாக பணியாற்றி வருகிறோம்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.