பிரதமர் மஹிந்தவுக்கும் உலக வங்கியின் உப தலைவருக்கும் இடையில் சந்திப்பு
by Steephen, Malaஇலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகள், கிராமிய அபிவிருத்தி என்பன புதிய அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என்பதுடன் சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறைகளுக்கு உதவ வேண்டும் என கடும் அக்கறை புதிய அரசாங்கத்திற்கு உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உலக வங்கியின் உப தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்று அலரி மாளிகையில் பிரதமரை சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் அனர்த்தத்தில் இருந்து நாடு வழமைக்கு திரும்பியிருக்கும் விதத்தை காண்பது மகிழ்ச்சிக்குரியது என Hartwig Schafer குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மக்களுக்கு பிரயோசனமான திட்டங்களை அடையாளம் காண உலக வங்கிக்கு முடியும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்திற்கு கடுமையான வீழ்ச்சியடைந்த பொருளாதார உரித்தாகி இருப்பதாகவும் அடையாளம் காணப்பட்ட துறைகளுக்கு உதவ உலக வங்கி தயாராக இருப்பதாக Hartwig Schafer கூறியுள்ளார்.
கையெழுத்திட்ட உடன்படிக்கைகள் அரசாங்கத்தின் முக்கியத்துவம் மற்றும் கொள்கையுடன் ஒத்து போகின்றதா என்பதை உறுதிப்படுத்துவது முக்கியமானது என்பது குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
கமத்தொழில், பெருந்தோட்டதுறை, சுற்றுலா போன்ற துறைகளில் செயற்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் கிராமிய பிரதேசங்களில் பெண்களை வலுப்படுத்துவது தொடர்பாக உலக வங்கியின் பிரதிநிதிகள் கலந்துரையாடியுள்