தர்பார் படம் உண்மையில் நஷ்டமா? நஷ்ட ஈடு கேட்டு வந்தவர்கள் யார்? – மின்முரசு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படம் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறி விநியோகிஸ்தர்கள் சிலர் ரஜினி வீட்டின் முன் கூடியதாக ஒரு செய்தி வெளியானது
ஆனால் இவ்வாறு வரும் செய்தியில் ரஜினி வீட்டின் முன் கூடியவர்கள் எந்த ஏரியாவை வாங்கிய வினியோகஸ்தர்கள் என்ற தகவல் இதுவரை இல்லை. யாரோ சிலர் நின்றதை வைத்து உடனே விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்டு வந்ததாக வதந்தி பரவியதாக கூறப்படுகிறது
சென்னை மதுரை கோவை ஆகிய மூன்று ஏரியாக்களிலும் தர்பார் திரைப்படம் மிகப்பெரிய லாபத்தை பெற்று இருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது மற்ற ஏரியாக்களில் மட்டும் தர்பார் திரைப்படம் எப்படி நஷ்டத்தை கொடுத்திருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது .சென்னை மதுரை கோவை ஆகிய மூன்று ஏரியாக்களில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு உள்ளதால் இந்த படத்தின் வசூல் கணக்கை மிகச்சரியாக துல்லியமாக உள்ளது
ஆனால் மற்ற ஏரியாக்களில் உள்ள திரையரங்குகளில் கம்ப்யூட்டர் மயமாக்கப்படவில்லை என்பதால் உண்மையான வசூல் திரையரங்கு உரிமையாளர்களுக்கு மட்டுமே தெரியும். 100 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை டிக்கெட்டுக்கு பணத்தை வசூலித்து விட்டு அரசுக்கு வெறும் 50 ரூபாய் டிக்கெட் விற்றதாக மட்டுமே கணக்கு காட்டி அந்தக் கணக்கின்படி தங்களுக்கு தர்பார் திரைப்படம் நஷ்டம் என்று விநியோகஸ்தர்கள் வதந்தியை கிளப்பி வருவதாக சினிமா ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
The post தர்பார் படம் உண்மையில் நஷ்டமா? நஷ்ட ஈடு கேட்டு வந்தவர்கள் யார்? appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes
Puvi Moorthy
Post navigation
பொருளாதார மேலாய்வு 2020: பொருளாதார ஆய்வறிக்கையில் முக்கிய அம்சங்கள்..!நிர்வாணமாக நடித்த பிக்பாஸ் நடிகை: பெரும் பரபரப்பு
Related Posts
தஞ்சை கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்த அனுமதி – மதுரை உயர்நீதிநீதி மன்றம் தீர்ப்பு
மடியை நனைக்கும் நதியே…6 நிமிட வாசிப்பு“பச்ச உடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லு… பிள்ளைக்குத் தாய்ப்பாலத் தூக்கிக் கொடுக்கச்சொல்லு” என்று கிழக்குச…
murugan Feb 1, 2020Feb 1, 2020 0 comment