பொருளாதார மேலாய்வு 2020: பொருளாதார ஆய்வறிக்கையில் முக்கிய அம்சங்கள்..! – மின்முரசு

 

 

டெல்லி: நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், இன்று முதன்மை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் தனது பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.

இந்த பொருளாதார ஆய்வறிக்கையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் முக்கிய அம்சங்கள் என்னென்ன என்று தான் தற்போது பார்க்க போகிறோம்.

1) நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 5% ஆக இருக்கும்.

2) நாட்டின் பொருளாதார வளர்ச்சி அடுத்த நிதியாண்டில் 6 -6.5% ஆக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

3) நடப்பு கணக்கு பற்றாக்குறை இலக்கு தளர்த்தப்பட வேண்டியிருக்கும்.

4) உலக அளவில் நிலவி வரும் மந்த நிலையினாலும், இந்திய பொருளாதார வளர்ச்சியிலும் மந்த நிலை நிலவி வருகிறது.

5) புதியதாக தொழில் தொடங்குவதற்காக நடைமுறைகளை மிக எளிதாக்க வேண்டும்.

6) ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிக்கும் வகையில் சொத்துக்கள் பதிவு செய்வது, வரி செலுத்துவது, ஒப்பந்தம் உள்ளிட்டவற்றின் நடைமுறைகளை எளிதானதாக மாற்ற வேண்டும்.

7) உள்கட்டமைப்பு துறையில் தனியார் உதவியுடன் அதிக அளவிலான முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்.

8) ஜிஎஸ்டி வரியை அதிகரிக்க, முதலில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். மேலும் நடப்பு நிதியாண்டில் வரி வருவாயானது அரசின் இலக்கினை விட குறைவாகவே இருக்கும்.

9) முறையான வேலை வாய்ப்பின் பங்கு 2011 – 12ல் 17.9% ஆகவும், இதே 2017 – 18ல் 22.8% ஆகவும் அதிகரித்துள்ளது.

10) மத்திய அரசின் 2024 – 25ம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி இலக்கான 5 டிரில்லியன் டாலரை அடைய, இந்த நிதியாண்டில் 1.4 டிரில்லியன் டாலர்களை உள்கட்டமைப்புகாக செலவிட வேண்டும்.

11) கடந்த 2011 – 12ஐ விட 2017- 18ல் வழக்கமான வேலை வாய்ப்பினை விட பெண்களின் பங்கு 8% அதிகரித்துள்ளது.

12) முதலீடுகள் அதிகமாக வராததால் தொழில் துறை மந்தமாகவே காணப்படுகிறது.

13) கடன் தள்ளுபடிகள் கடன் கலாச்சாரத்தை சீர்குலைக்கின்றன.

14) பொத்துறை வங்கிகளில் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான அழைப்புகள், நம்பிக்கையை வளர்ப்பதற்கான கூடுதல் வெளிப்பாடுகள் வேண்டும்.

15) கச்சா எண்ணெய் விலையை குறைப்பு நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்கிறது. நடப்பு நிதியாண்டின் பாதியில் ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகரித்துள்ளது.

16) ஜிஎஸ்டி வரி வசூல் விகிதம் கடந்த ஏப்ரல் – நவம்பர் 2019 காலத்தில் 4.1% அதிகரித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க Get Latest News alerts. You have already subscribed

Source: Goodreturns

https://secure.gravatar.com/avatar/c78300fab31b0f0459ea70f75dfa173e?s=100&d=mm&r=g

murugan

Post navigation

திடீர் திருப்பம்: நிர்பயா கொலை குற்றவாளிகளை நாளை தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் தடை!மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் புனரமைப்பு பணிக்கு ரூ.18.20 கோடி நிதிக்கு அரசு ஒப்புதல்

Related Posts

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/202001312132116543_1_thalaivi-2._L_styvpf.jpg

கங்கனாவின் ஜெயலலிதா தோற்றத்தை வரவேற்கும் ரசிகர்கள்

murugan Jan 31, 2020Jan 31, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/themes/ta-newspaper/images/fallback-image/380X230.jpg

நயன்தாராவாக மாறிவிட்டாரா த்ரிஷா? கோலிவுட்டில் பரபரப்பு

Ilayaraja Jan 31, 2020Jan 31, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/themes/ta-newspaper/images/fallback-image/380X230.jpg

’தளபதி 65’ பட இயக்குனர்களின் பட்டியலில் திடீரென இணைந்த புதிய இயக்குநர்

Ilayaraja Jan 31, 2020 0 comment