மெல்போர்ன் விண்மீன்கள் அணியை துவம்சம் செய்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சிட்னி சிக்சர்ஸ் – மின்முரசு

பிக் பாஷ் குவாலிபையரில் மெல்போர்ன்ஸ் ஸ்டார்ஸ் அணியை 99 ரன்னில் சுருட்டி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சிட்னி சிக்சர்ஸ்.

பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது பிளே-ஆப்ஸ் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று குவாலிபையர் ஆட்டம் நடைபெற்றது. இதில் முதல் இரண்டு இடங்களை பிடித்த சிட்னி சிக்சர்ஸ் – மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்பதால் இரண்டு அணிகளும் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் களம் இறங்கின.

மெல்போர்ன் ஸ்டார்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி சிட்னி சிக்சர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் சீரான பந்து வீச்சால் சிட்னி சிக்சர்ஸ் வீரர்கள் ரன்கள் எடுக்க திணறினர். பிலிப் 28 பந்தில் 34 ரன்கள் சேர்த்தார். ஸ்டீவ் ஸ்மித் 18 பந்தில் 24 ரன்களும், சில்க் ஆட்டமிழக்காமல் 21 பந்தில் 25 ரன்களும் அடிக்க சிட்னி சிக்சர்ஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 143 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மெல்போர்ன் ஸ்டார்ஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் மேடின்சன் 15 ரன்னில் ஆட்டமிழந்தா்ர. அதன்பின் வந்த ஸ்டாய்னிஸ் (5), லர்கின் (4), ஹேண்ட்ஸ்காம்ப் (4), கோட்ச் (4), கவுல்டர்-நைல் (7) சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.

கேப்டன் மேக்ஸ்வெல் 16 ரன்கள் சேர்த்தார். ஹின்சிஃப் ஆட்டமிழக்காமல் 25 ரன்கள் எடுத்தாலும், மெல்போர்ன் ஸ்டார்ஸ் 99 ரன்னில் சுருண்டது. இதனால் சிட்னி சிக்சர்ஸ் 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

Related Tags :

Source: Maalaimalar

https://secure.gravatar.com/avatar/47e80d94693a8df7e4727c7c1c8b1056?s=100&d=mm&r=g

Ilayaraja

Post navigation

‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ கோஷம் பொய்யா? திமுக, அதிமுக செய்தது சரிதான்.. பாஜக ‘அங்கீகாரம்’வீட்டின் மேற்கூரை இடிந்து 2 சிறுவர்கள் பலி: பரமக்குடி அருகே சோகம்

Related Posts

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/02/202002010317567214_Permission-to-Consecrate-Tamil-and-Sanskrit-in-thanjavur_SECVPF.gif

தஞ்சை கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்த அனுமதி – மதுரை உயர்நீதிநீதி மன்றம் தீர்ப்பு

murugan Feb 1, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/02/2-696x500.jpg

மடியை நனைக்கும் நதியே…6 நிமிட வாசிப்பு“பச்ச உடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லு… பிள்ளைக்குத் தாய்ப்பாலத் தூக்கிக் கொடுக்கச்சொல்லு” என்று கிழக்குச…

murugan Feb 1, 2020Feb 1, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/02/1-696x500.jpg

ஊடக அறம், உண்மையின் நிறம்!2 நிமிட வாசிப்புகாலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்து…

murugan Feb 1, 2020Feb 1, 2020 0 comment