நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தனித்தனியாக தூக்கிலிட முடியாது: டெல்லி நீதிமன்றம்
புதுடெல்லி: நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தனித்தனியாக தூக்கிலிட முடியாது என்று டெல்லி நீதிமன்றம் கூறியுள்ளது. வினய் குமாரின் கருணை மனு நிலுவையில் இருப்பதால் மற்ற 3 பேரை நாளை தூக்கிலிடலாம் என திகார் சிறை நிர்வாகம் வாதாடிய நிலையில், நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது. மேலும், 4 குற்றவாளிகளும் ஒரே வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர்கள், எனவே 4 பேரையும் ஒரே நேரத்தில் தான் தூக்கிலிட முடியும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.