கேரள நேந்திரம் வாழை சின்னமனூரில் தீவிர சாகுபடி
சின்னமனூர் : சின்னமனூர் பகுதியில் அதிக பரப்பளவில் கேரளா நேந்திரம் வாழையை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். சின்னமனூரைச் சுற்றியுள்ள குச்சனூர், துரைச்சாமிபுரம், சங்கராபுரம் இணைப்பு சாலை, எரசக்கநாயக்கனூர், முத்துலாபுரம், அப்பபட்டி, ஓடைப்பட்டி, காமாட்சிபுரம், சீப்பாலக்கோட்டை, அழகாபுரி, வேப்பம்பட்டி, கன்னிசேர்வைபட்டி உள்ளிட்ட கிராமங்களில் பச்சை, நாழி பூவன், கற்பூரவள்ளி, பூவன், செவ்வாழை உள்பட பல ரகங்களில் விவசாயிகள் தொடர் சாகுபடி செய்து வருகின்றனர். ஏக்கருக்கு 2 லட்ச ரூபாய் வரை செலவு செய்து வாழையை விவசாயிகள் வளர்த்து வருகிறார்கள்.
இவற்றை அறுவடை செய்து தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் அனுப்புகின்றனர். தேனி மாவட்ட சின்னமனூர் வாழைக்கு உள்நாடுகள் தவிர்ந்து சிங்கப்பூர், மலேசியா வரை மவுசு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் அண்டைய மாநிலமான கேரளாவில் நேந்திரம் பழம் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த பழத்தில் நேந்திரம் சிப்ஸ் செய்யப்படுகிறது. இப்பழம் தேனி மாவட்டத்தில் உள்ள கம்பத்திற்கு அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வருவதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வருகிறது. இந்நிலையில் சின்னமனூர் பகுதி விவசாயிகள், நேந்திரமும் சாகுபடியல் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.