https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/31/original/Opposition_protest_in_Parliament_premises.jpg

நாடாளுமன்ற வளாகம் வெளியே எதிர்க்கட்சிகள் போராட்டம்

by

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், சிஏஏ, என்ஆர்சி மற்றும் என்பிஆர் ஆகியவைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தனது 2-ஆவது ஆட்சிக் காலத்தின் 2-ஆவது பட்ஜெட்டை சனிக்கிழமை தாக்கல் செய்கிறது. நாடாளுமன்ற நாள் குறிப்பின்படி, 2020-21-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1-ஆம் தேதி காலை 11 மணியளவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். அவர் தாக்கல் செய்யும் முதல் முழு பட்ஜெட் இதுவாகும்.

இந்த நிலையில், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா தலைமையில், நாடாளுமன்ற வளாகத்தின் வெளியே காந்தி சிலை அமைந்துள்ள பகுதியில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டன. அப்போது தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக கைகளில் கறுப்புப் பட்டை அணிந்திருந்தனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!