
வெளிநாடுகளிலுள்ள வூ ஹான் மக்களைச் சீனாவுக்கு அழைக்கத் திட்டம்
by DINசீனாவின் பல பகுதிகளில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளிலுள்ள வூ ஹான் மக்களைச் சீனாவுக்கு அழைக்க சீன அரசு திட்டமிட்டுள்ளது.
வெளிநாடுகளிலுள்ள சீனாவின் ஹூ பெய் மாநிலத்தைச் சேர்ந்த பயணியர்கள், குறிப்பாக வூ ஹான் நகர்ப் பயணியர்களின் நடைமுறை சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, அவர்களைச் சிறப்புப் பயணியர் விமானம் மூலம் கூடிய விரைவில், சீனாவுக்குக் கொண்டு வர, சீனா அரசு திட்டமிட்டுள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் அம்மையார் 31ஆம் தேதி(இன்று) தெரிவித்தார்.
தகவல்:சீன ஊடகக் குழுமம்