https://s3.amazonaws.com/adaderanatamil/1580458512-srivszim-2.jpg

இலங்கை அணிக்கு சிம்பாப்வே நிர்ணயித்த வெற்றி இலக்கு!

சுற்றுலா இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் இடம்பெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு 361 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற சிம்பாப்வே அணி தனது முதல் இன்னிங்சில் 405 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்ட நிலையில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 293 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இந்நிலையில், தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி போட்டியின் 5 ஆவது நாளான இன்று 7 விக்கெட்டுக்களை இழந்து 247 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டத்தை இடைநிறுத்தியது.

சிம்பாப்பே அணி சார்பில் பிரன்டன் டெய்லர் அதிகபட்சமாக 67 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

அதன்படி, இலங்கை அணிக்கு 361 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி சற்றுமுன்னர் வரை விக்கெட் இழப்பின்றி 14 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.