கழுத்தில் சிக்கிய டயர்… செத்துக் கொண்டிருக்கும் முதலை.. மீட்பவர்களுக்கு பரிசு அறிவிப்பு – மின்முரசு
ஜகர்தா: இந்தோனேஷியாவில் முதலையின் கழுததில் மோட்டார் சைக்கியின் டயர் ஒன்று சிக்கியுள்ளது. கடந்த 2016ம் ஆண்டுடன் டயருடன் தவித்து முதலையை அதில் இருந்து விடுவிப்போருக்கு பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் அரசு நடத்தும் அன்டாரா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி, மத்திய சுலவேசி மாகாணத்தில் பாலு ஆற்றில் 2016 முதல் டயரை கழுததில் சுமந்தபடி ஒரு முதலை சுற்றி வருகிறது.
2018 ஆம் ஆண்டில் இப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் இருந்து முதலை உயிர் தப்பியது – ஆனால் டயர் மட்டும் அதன் கழுத்திலிருந்து விடுபடவில்லை.
இதனிடயே கழுத்தை நெறிக்கப்படுவதால் கொஞ்சம் கொஞ்சம் செத்துக்கொண்டிருக்கும் முதலையை காப்பாற்ற வேண்டும் என முடிவு செய்த இந்தோனேஷியாவின் த்தில், மத்திய சுலவேசியின் இயற்கை வள பாதுகாப்பு அலுவலகம் (பி.கே.எஸ்.டி.ஏ) இந்த வாரம் அதை விடுவிக்க வைப்பதற்கக ஒரு போட்டியைத் தொடங்கியது.
“சந்தோஷத்தை இழந்து உயிரை காப்பாற்ற போராடி வரும் அந்த முதலையின் கழுத்தில் சிக்கியுள்ள டயரை விவிடுத்து அதை காப்பாற்றும் எவருக்கும் வெகுமதி வழங்கப்படும்” என்று மத்திய சுலவேசி பி.கே.எஸ்.டி.ஏ தலைவர் ஹஸ்முனி ஹஸ்மர் தெரிவித்தார். ஆனால் என்ன வெகுமதி என்பது குறித்த கூடுதல் விவரங்களை ஹஸ்மர் தெரிவிக்கவில்லை.
முதலையின் கழுத்தில் இருந்து டயரை அகற்ற இரண்டு முயற்சிகள் நடந்துள்ளன. 2018 ஆம் ஆண்டில், பாதுகாவலரும் “விலங்கு விஸ்பரருமான” முஹம்மது பன்ஜி ஒரு முயற்சியை மேற்கொண்டார், அந்த ஆண்டின் பிற்பகுதியில் பாதுகாப்பு அலுவலகம் முதலைக்கு இறைச்சியை கொடுத்து ஈர்க்க முயன்றது. இரண்டு முயற்சிகளும் தோல்வியடைந்தன.
Source: OneIndia
vikram
Post navigation
வெளி மாநில வரத்து துவங்கியதால் பெரிய வெங்காயம் விலை சரிந்ததுபாலிநுட்பம் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க திட்டம்
Related Posts
மீண்டும் கவர்ச்சியில் இறங்கிய எமி ஜாக்சன் – மிகுதியாகப் பகிரப்படும் புதிய புகைப்படம்
murugan Jan 31, 2020Jan 31, 2020 0 comment
அசுரன் தெலுங்கு மறுதயாரிப்புகில் இணைந்த பிரபல தமிழ் நடிகை
Ilayaraja Jan 31, 2020Jan 31, 2020 0 comment