நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை ஒத்திவைப்பு – டெல்லி கோர்ட் – மின்முரசு

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு மீண்டும் தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்து டெல்லி கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டது.

நிர்பயா வழக்கு

புதுடெல்லி:

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்‌ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கும் பிப்ரவரி 1-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

அவர்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்களும், ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகள் அடுத்தடுத்து புதிய மனுக்களை தாக்கல் செய்து தண்டனையை நிறைவேற்ற விடாமல் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி குற்றவாளிகள் தரப்பில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவைடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு மறு உத்தரவு வரும் வரை மீண்டும் தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்து டெல்லி கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Tags :

Source: Maalaimalar

https://secure.gravatar.com/avatar/c78300fab31b0f0459ea70f75dfa173e?s=100&d=mm&r=g

murugan

Post navigation

கழுத்தில் சிக்கிய டயர்… செத்துக் கொண்டிருக்கும் முதலை.. மீட்பவர்களுக்கு பரிசு அறிவிப்புமீண்டும் ரஜினியுடன் இணைந்த நயன்தாரா – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Related Posts

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/ec11-1580475625.jpg

பொருளாதார மேலாய்வு 2020: பொருளாதார ஆய்வறிக்கையில் முக்கிய அம்சங்கள்..!

murugan Jan 31, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/g_arrow-833.jpg

திடீர் திருப்பம்: நிர்பயா கொலை குற்றவாளிகளை நாளை தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் தடை!

vikram Jan 31, 2020Jan 31, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/Tamil_News_29_Jan_446941554546357.jpg

தமிழகத்தில் பிப்ரவரி 6ல் வனத்துறைக்கு சொந்தமான யானைகளுக்கான புத்துணர்வு முகாம்

Puvi Moorthy Jan 31, 2020Jan 31, 2020 0 comment