http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_29_Jan_493251979351044.jpg

நல்ல திட்டங்களை நிறைவேற்ற திமுக மட்டுமே பொருத்தமானது என்று மக்கள் நம்புகின்றனர்: மு.க.ஸ்டாலின்

திருச்சி: உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். திருச்சியில் திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலில் திமுக பெற்ற வெற்றியால் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், மாநில தேர்தல் ஆணையம் அதிமுக தலைமை கழகமாக செயல்பட்டது. அதிகார துஷ்பிரயோகத்தை சந்தித்து திமுக வெற்றி பெற்றுள்ளது. நல்ல திட்டங்களை நிறைவேற்ற திமுக மட்டுமே பொருத்தமானது என்று மக்கள் நம்புகின்றனர் என கூறியுள்ளார்.