https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/31/original/one_lakh_participated_in_special_reading_program_1.jpeg

ஒரு லட்சம் பேர் பங்கேற்ற 'புதுக்கோட்டை வாசிக்கிறது' நிகழ்ச்சி

by

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புதுக்கோட்டையில் வரும் பிப். 14 முதல் 23ஆம் தேதி வரை நடைபெறவுள்ள 4ஆவது புத்தகத் திருவிழாவையொட்டி ஒரு லட்சம் பேர் பங்கேற்ற 'புதுக்கோட்டை வாசிக்கிறது' நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2020/1/31/one_lakh_participated_in_special_reading_program_2.jpeg

மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் இதில் பங்கேற்றன. அந்தந்த கல்வி நிறுவனங்களிலேயே மாணவர்கள், ஆசிரியர்களும் ஒரே இடத்தில் அமர்ந்தும், வகுப்பறைக்குள் அமர்ந்தும் வெவ்வெறு வகையான நூல்களை வாசித்தனர்.

https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2020/1/31/one_lakh_participated_in_special_reading_program_3.jpeg

புதுக்கோட்டை ராணியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வாசிப்பு நிகழ்ச்சியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பெ.வே அருண்ஷக்திகுமார், மாவட்டக் கல்வி அலுவலர் கே.எஸ். ராஜேந்திரன் உள்ளிட்டோரும் பங்கேற்று மாணவிகளுடன் அமர்ந்து நூல்களை வாசித்தனர்.

https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2020/1/31/one_lakh_participated_in_special_reading_program_4.jpeg

இதற்கான ஏற்பாடுகளை புத்தகத் திருவிழாப் பணிகள் ஒருங்கிணைப்புக் குழுவினர் நா. முத்துநிலவன், அ. மணவாளன், க. சதாசிவம், ம. வீரமுத்து, மு. முத்துக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2020/1/31/one_lakh_participated_in_special_reading_program_5.jpeg

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!