சம்பந்தனின் முடிவால் நகரசபை உறுப்பினர் இராஜினாமா
by Abdulsalam Yaseem, Rebeccaஇலங்கை தமிழரசுக் கட்சியின் செயற்குழு உறுப்பினரான ஸ்ரீஸ் கந்தராஜா சேனாதிராஜா திருகோணமலை நகர சபை உப தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.
திருகோணமலை நகர சபையின் செயலாளர் டி.ஜெயவிஷ்ணுவிடம் இன்று தனது இராஜினாமா கடிதத்தை அவர் கையளித்துள்ளார்.
கடந்த தேர்தலின் போது இலங்கை தமிழரசுக் கட்சியுடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமையவே இந்த இராஜினாமா இடம்பெறுவதாக சேனாதிராஜா ஸ்ரீஸ் கந்தராஜா தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தனக்கு மூன்றாவது ஆண்டில் திருகோணமலை நகர சபையின் தலைவராக நியமிப்பதாக தெரிவித்ததாகவும் அந்தவகையில், இந் நியமனம் கிடைப்பதாக எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1970ஆம் ஆண்டில் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட இவர், அரசியலில் ஐம்பது வருடங்களை பூர்த்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.