https://s3.amazonaws.com/adaderanatamil/1580453108-ravinath-2.jpg

284 இலங்கையர்கள் மாத்திரமே சீனாவில் தற்போது உள்ளனர்

சீனாவின் வுஹான் நகரிலுள்ள இலங்கை மாணவர்களையும், அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு விசேட விமானத்தை அனுப்புவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் விடுத்த கோரிக்கையை சீன அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்ஹ இதுதொடர்பாக தெரிவிக்கையில் Hubei வெளிநாட்டு அலுவலகமும் வுஹான் நகர சபையும் பேஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகமும் இதுகுறித்து ஆராய்ந்து வருவதாக கூறினார்.

சீனாவில் 284 இலங்கையர்கள் மாத்திரமே தற்போது உள்ளனர். சீனாவிலிருந்து 580 பேர் தற்போதைய நிலையில் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)