“புறநகர் “படத்தின் கரு…. சாதிக் கொடுமை தான் தேசத்தின் வியாதி! – மின்முரசு
வள்ளியம்மாள் புரொடக்ஷன் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் ஜிம்னாஸ்டிக் வீரர் கமல்கோவின்ராஜ் தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள படம் ” புறநகர் “. கதாநாயகியாக சுகன்யா, அஸ்வினி சந்திரசேகர் இருவரும் நடித்துள்ளனர். மற்றும் தேனி முருகன், கதிரவகண்ணன், செல்வம், தயாளன், ரகு, கணேஷ், தாம்பரம் சிங்கம் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் அனல் அண்ணாமலை வில்லனாக அறிமுகமாகிறார்.
இலங்கை தமிழர்களின் துயரத்தை சொல்லும் “ எல்லாளன் “ படத்தை இயக்கிய மின்னல் முருகன் இப்படத்தை இயக்குகிறார். இது குறித்து மின்னல் முருகன் கூறியதாவது… சாதிக் கொடுமை தான் தேசத்தின் வியாதி ‘‘ ஜாதிப் பிரச்சனையால் சமுதாயத்தில் வாழமுடியாத நாயகன் புகலிடம் தேடி புறநகரில் தஞ்சமடைகிறார். அந்த இடத்திலும் சமூகம் அவரை வாழவிடமால் செய்கிறது. தன்னைப் பாதுகாத்துக் கொள்ள நாயகன் எத்தகைய முயற்சிகளை எடுக்கிறார் என்பதை கமர்ஷியலாக சொல்லும் படம்தான் ‘புறநகர்’.
இந்தப் படத்தின் படப்பிடிப்பை சென்னையைச் சுற்றிய புறநகரில் படமாக்கினோம். ஸ்டண்ட் மாஸ்டராக இருந்தாலும் சண்டைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் அனைவரும் ரசிக்கும்படியான படமாக எடுத்துள்ளேன்’’ இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கானா பாடல்கள் இந்த வருடத்தின் வெற்றிப்பாடல்கள் வரிசையில் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார் இயக்குனர் மின்னல் முருகன்.
Source: Webdunia.com
Ilayaraja
Post navigation
மீண்டும் ஒரு சூப்பர் சுற்றில் இந்தியா அசத்தல்: நியூசிலாந்துக்கு ஏமாற்றம்களம் இறங்கியது ராணுவம்.. வுஹானில் இருந்து திரும்பும் இந்தியர்களுக்காக.. பெரும் கூடாரம் அமைக்கிறது!
Related Posts
பொருளாதார மேலாய்வு 2020: பொருளாதார ஆய்வறிக்கையில் முக்கிய அம்சங்கள்..!
murugan Jan 31, 2020 0 comment
திடீர் திருப்பம்: நிர்பயா கொலை குற்றவாளிகளை நாளை தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் தடை!
vikram Jan 31, 2020Jan 31, 2020 0 comment