களம் இறங்கியது ராணுவம்.. வுஹானில் இருந்து திரும்பும் இந்தியர்களுக்காக.. பெரும் கூடாரம் அமைக்கிறது! – மின்முரசு
டெல்லி: சீனாவின் வுஹானில் இருந்து திரும்பும் இந்தியர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அவர்களை தங்க வைப்பதற்கான தனி கூடாரத்தை இந்திய ராணுவம் ஹரியானாவில் அமைத்துள்ளது.
கொரோனாவைரஸ் தாக்குதலால் சீனாவின் வுஹான் நகரைத்தைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் வுஹான் நகரில் வெளிநாட்டு மக்கள் தங்களின் சொந்த நாட்டுக்கு திரும்பி வருகிறார்கள். அந்தந்த நாடுகள் தனி விமானத்தை அனுப்பி தங்கள் நாட்டுக்கு திருப்பி அழைத்து செல்கின்றன.
இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜபபான் என அனைத்து நாடுகளுமே தங்கள் நாடுகளைச் சேர்ந்தவர்களை தனி விமானம் மூலம் அழைத்து வர முடிவு செய்துள்ளன.
இந்நிலையில் இந்தியாவும் வுஹான் நகரில் படித்து வரும் 300 க்கும் மேற்பட்ட மாணவர்களை இந்தியா அழைத்து வர ஏர் இந்தியா விமானம் இன்று புறப்படுகிறது. மற்றொரு விமானம் நாளை சனிக்கிழமை டெல்லியில் இருந்து புறப்படுகிறது.
வுஹானில் இருந்து இந்தியா அழைத்து வரப்படும் இந்தியர்களை இரண்ட வாரங்கள் தனியாக வைத்து கண்காணிக்க வேண்டி உள்ளது. அப்படி கண்காணிப்பதற்காக ஹரியானா மாநிலம் மானசரில் கூடாரம் அமைக்கப்படுகிறது. இதில் அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன. மருத்துவமனை போல் படுக்கைகள் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு யாருக்கேனும் நோய் அறிகுறி தெரிந்தால் உடனே அவர்கள் டெல்லி கண்டோன்மெண்டில் உள்ள அரசு மருத்துவமனையில் இயங்கும் சிறப்பு பிரிவுக்கு மாற்றப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Source: OneIndia
vikram
Post navigation
“புறநகர் “படத்தின் கரு…. சாதிக் கொடுமை தான் தேசத்தின் வியாதி!நடுத்தெருவில் விழுந்து கிடந்த சடலம்.. வுஹான் நகர கொடுமை.. உலுக்கி எடுக்கும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)
Related Posts

பொருளாதார மேலாய்வு 2020: பொருளாதார ஆய்வறிக்கையில் முக்கிய அம்சங்கள்..!
murugan Jan 31, 2020 0 comment

திடீர் திருப்பம்: நிர்பயா கொலை குற்றவாளிகளை நாளை தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் தடை!
vikram Jan 31, 2020Jan 31, 2020 0 comment
