அத்திம்பேரின் கிளாஸ்மேட்டை திருமணம் செய்த பிரபல நடிகை – மின்முரசு

Samayam Tamil | Updated:31 Jan 2020, 05:06 PM

பிரபல நடிகை பாமாவுக்கும், தொழில் அதிபர் அருணுக்கும் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது.

பாமா திருமணம்

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/73804793.jpg

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்து வருபவர் கேரளாவை சேர்ந்த பாமா. அவருக்கும், அருண் என்கிற தொழில் அதிபருக்கும் கடந்த 21ம் தேதி கொச்சியில் நிச்சயதார்த்தம் நடந்தது. அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பாமா சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்நிலையில் கோட்டயத்தில் அருண், பாமா திருமணம் நல்லபடியாக நடந்துள்ளது.

திருமணம்

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/73804803.jpg

இந்து முறைப்படி நடந்த திருமண நிகழ்ச்சியில் இரு வீட்டார், உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். பாமா காஞ்சிபுரம் பட்டுப் புடவை அணிந்து அழகாக இருந்தார். பாமா திருமணத்தில் நடிகர் சுரேஷ் கோபி, நடிகை மியா ஆகியோர் கலந்து கொண்டார்களாம். திருமணத்தின்போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அருண்

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/73804800.jpg

பாமா, அருண் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கொச்சியில் நடக்க உள்ளது. அதில் திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள். கனடாவில் படித்த அருண் துபாயில் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். பாமா அக்கா கணவரின் கிளாஸ்மேட் தான் இந்த அருண். பாமாவுக்கு அருணை பல ஆண்டுகளாக தெரியும். இருப்பினும் இது காதல் திருமணம் இல்லை.

நடிப்பு

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/73804797.jpg

குடும்ப நண்பர்களாக இருந்தவர்களை பெற்றோர் பார்த்து கணவன், மனைவியாக்கியுள்ளனர். திருமணத்திற்கு பிறகு பாமா படங்களில் தொடர்ந்து நடிப்பாரா என்பது இன்னும் தெரியவில்லை. பாமா எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர். அவருக்கு திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Source: samayam

https://secure.gravatar.com/avatar/c78300fab31b0f0459ea70f75dfa173e?s=100&d=mm&r=g

murugan

Post navigation

இங்கேயும் வந்துட்டீங்களா மகாபிரபு, வெளங்கிடும்: சிம்பு ரசிகர்கள்கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): இலங்கையின் 48 மணிநேரத்தில் கட்டப்படும் மருத்துவமனை

Related Posts

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/ec11-1580475625.jpg

பொருளாதார மேலாய்வு 2020: பொருளாதார ஆய்வறிக்கையில் முக்கிய அம்சங்கள்..!

murugan Jan 31, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/g_arrow-833.jpg

திடீர் திருப்பம்: நிர்பயா கொலை குற்றவாளிகளை நாளை தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் தடை!

vikram Jan 31, 2020Jan 31, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/01/Tamil_News_29_Jan_446941554546357.jpg

தமிழகத்தில் பிப்ரவரி 6ல் வனத்துறைக்கு சொந்தமான யானைகளுக்கான புத்துணர்வு முகாம்

Puvi Moorthy Jan 31, 2020Jan 31, 2020 0 comment