ஜியோ வேற லெவல்: இனி டிவி மூலம் வீடியோ கால்., செட்ஆப் பாக்ஸில் கேமரா., மலிவு விலையில் அறிமுகம்
by Karthick Mஜியோ திட்டங்கள் அறிக்கப்பட்ட போது தெளிவு இல்லாத விஷயங்களில் ஒன்று, பயனர்கள் டிடிஎச் அல்லது கேபிள் டிவி இணைப்புக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் வாடிக்கையாளர்கள் கூடுதல் டேட்டா செலவில் வழக்கமான தரவுத் திட்டங்களுடன் தொலைக்காட்சி சேவைகளையும் அனுபவிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் மாதாந்திர பில்லிங் துவங்கியதும், நேரடி சேனல்களை பார்ப்பதற்காக செட்-டாப் பாக்ஸ்களை வழங்கப்படும் என தகவல் பரவியது.

ஜியோ ஃபைபர் செட்-டாப் பாக்ஸ்
ஜியோ ஃபைபர் செட்-டாப் பாக்ஸ் ஆனது ஆண்ட்ராய்டு அடிப்படையிலான ஸ்ட்ரீமிங் பிளேயர். இதனுடன் HDMI இணைப்பைப் பயன்படுத்தி டிவிகளுடன் இணைக்க முடியும். இது ப்ளூடூத் அடிப்படையிலான ரிமோட் கண்ட்ரோல் வழங்கப்படுகிறது. செயல்பாடோடு இருக்கும் இன்டெர்நெட் இணைப்புடன் சேனல்களை ஸ்டிரீமிங் செய்யவேண்டும். அதோடு இது ஆண்ட்ராய்டு 7.0 மூலம் இயக்கப்படுகிறது.

Myjio ஆப் மூலமாக திட்டம் தேர்ந்தெடுக்கலாம்
Myjio ஆப் வழியாக ஜியோ பைபர் திட்டத்தை தேர்வு செய்யவும், காலாண்டு மற்றும் வருடாந்திர திட்டத்தையும் தேர்வு செய்யலாம். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி சேவையை பயன்படுத்தலாம். அல்லது ஜியோ பைபர் பெறுவதற்கு அருகில் உள்ள செட்ஆப் பாக்ஸ் டீலர்களை அணுகலாம். வழிமுறைகள் பின்பற்றி அல்லது ஜியோ தொழில்நுட்ப வல்லுநர் உதவியோடு பைபர் இன்ஸ்டால் செய்யலாம்.

ஜியோடிவி கேமரா
ஜயோ பைபர் பயனர்களுக்கு தற்போது ஜியோடிவி கேமரா என்ற நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அது என்ன ஜியோடிவி கேமரா என கேள்வி எழத் தொடங்கியுள்ளது. அனைத்திலும் புதுமையை யோசித்து அறிமுகப்படுத்தும் ஜியோ, தற்போது இதிலும் புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது.

புதிய தொழில்நுட்பம் அறிமுகம்
ஜியோ டிவி கேமரா என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது, இதன் விலையானது ரூ.2,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஆர்டர் செய்த மூன்று வேலை நாட்களில் டெலிவரி செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு 1 வருடம் வேரண்டியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 24 மாதம் இஎம்ஐ முறையிலும் வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் மூடுவிழாவா?- பிஎஸ்என்எல் ஊழியர்கள் 78,000 பேர் ஒரே நாளில் குட்-பை

ஜியோ கஸ்டமர் கேருடன் வீடியோ கால்
ஜியோவின் இந்த முறையானது முதற்கட்டமாக ஜியோ கஸ்டமர் கேருடன் வீடியோ கால் மேற்கொள்வதற்கு பயன்படும். அதுமட்டுமின்றி இதற்கான அடுத்தக்கட்ட பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி நிறைவுபெற்றால், அனைத்து ஜியோ நம்பருக்கும் வீடியோ, ஆடியோ கால் செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது.

ஜியோ பைபர் வீடியோ கால்ஸ்
ஜியோ.காம்-ல் இந்த ஜியோ டிவி கேமராவை வாங்கலாம். இந்த ஜியோ பைபர் வீடியோ கால்ஸ் தொழில்நுட்பம், இந்த தொழில்நுட்பம் டிவியோடு கனெக்ட் செய்யப்பட்டு வீடியோ கால் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது. ஜியோ கேமரா செட் அப் பாக்ஸ் மூலம் இந்த வீடியோ கால் அழைப்பு மேற்கொள்ளப்படுகிறது.

ஜியோ கால் பயன்பாட்டில் லேண்ட்லைன்
அதேபோல் இந்த JioTVCamera இன் USB ஐ Jio Set-Top Box உடன் இணைத்துக்கொள்ளலாம். பிறகு, STB ஐ மீண்டும் துவக்கி, ஜியோ கால் பயன்பாட்டில் லேண்ட்லைன் எண்ணை அமைக்கவும். நீங்கள் ஏற்கனவே ஜியோகால் பயன்பாட்டை அமைத்திருந்தால், STB ஐ மீண்டும் துவக்கி, செட்ஆப் பாக்ஸ் முன்பே நிறுவப்பட்டுள் ஜியோகால் பயன்பாட்டை ஓபன் செய்து பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.
Most Read Articles

ஜியோ நிறுவனத்தின் 6பைசா கட்டணம்: இதுக்கு ஒரு முடிவே கிடையாதா? எவ்ளோ நாட்கள் நீடிக்கும்?

தினசரி 1ஜிபி டேட்டா வழங்கும் டெலிகாம் நிறுவங்களின் அட்டகாச திட்டங்கள்.!

Elon Musk உருவாக்கிய புதிய பேங்கர் EDM டிராக்! லிஸ்டில் இது புதுசா இருக்கே!

Jio vs Airtel vs Vodafone Plans ரூ.200-க்கு கீழ் சிறந்த திட்டங்கள்:நம்ம பட்ஜெட்டுக்கு இதான் கரெக்ட்

நோக்கியா 5.2 ஸ்மார்ட்போனின் விவரங்கள் கசிந்தது: நான்கு ரியர் கேமரா.! முழுவிவரங்கள்.!

அறிய வாய்ப்பு., அலைமோதும் கூட்டம்: பிப்.,4 க்குள் 10 வினாடி வீடியோ அனுப்பினால் Free jio recharge!

போலி., போலி., போலி: பேஸ்புக் நிறுவனம் அதிரடி., இதை பேஸ்புக் பக்கத்தில் இருந்து உடனடியாக நீக்குங்கள்!

தினசரி 2ஜிபி டேட்டா நன்மைகள் வழங்கும் டெலிகாம் நிறுவனங்களின் அருமையான திட்டங்கள்.!

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்1 மாடல் நிறுத்தப்படுகிறது.

ஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா! இது தெரியாம போச்சே இத்தனை நாளா!

சரியாக 6மாதங்களில் களமிறங்கும் வாட்ஸ்ஆப் பே! ஜுக்கர்பெர்க்.!

ஜியோ, பாரதி ஏர்டெல் & வோடபோன் ஐடியாவில் தினமும் 3ஜிபி டேட்டா கிடைக்கும் திட்டங்கள்!
Best Mobiles in India

ஒப்போ F15
19,990

விவோ V17
22,390

ரியல்மி X2 ப்ரோ
28,959

விவோ S1 ப்ரோ
19,890

சாம்சங் கேலக்ஸி A70s
25,899

ஒன்பிளஸ் 7T
34,942

ஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்
1,06,900

ரியல்மி XT
15,640

ஒப்போ ரெனோ2
36,990

ஹுவாய் P30 ப்ரோ
71,990

ரியல்மி X2
16,969

ரியல்மி X2 ப்ரோ
28,959

விவோ U20
10,990

விவோ S1 ப்ரோ
19,890

சாம்சங் கேலக்ஸி M30s
12,999

ரெட்மி நோட் 8 ப்ரோ
14,894

நோக்கியா 7.2
14,500

ஆப்பிள்ஐபோன் 11
63,900

ஒன்பிளஸ் 7T
34,942

ஆப்பிள்ஐபோன் XR
47,799

போகோ F2 லைட்
20,000

ஆல்கடெல் 1B (2020)
4,800

ஆல்கடெல் 1V (2020)
6,400

ஆல்கடெல் 1S (2020)
8,000

கூல்பேட் Legacy 5G
28,300

சாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ
35,430

ரியல்மி C2s
3,210

ஆல்கடெல் 3L (2020)
11,250

ஒப்போ A8
12,000

ஒப்போ A91
20,580