
ஒரு நாள் குறைஞ்சா பத்து நாள் கூடும்.!!.. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து, ரூ.31,040 ஆக விற்பனை
சென்னை:சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து, ரூ.31,040 ஆக விற்பனையாகி வருகிறது. சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.11 குறைந்து ரூ.3,880 ஆக உள்ளது. இந்த நிலையில், சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு காசுகள் உயர்ந்து ரூ.50.20 காசுகளாவுகம், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.50,200 ஆகவும் உள்ளது.
தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து அதிகரித்து வந்தது. கடந்த 8ம் தேதி தங்கம் விலை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது, ஒரு சவரன் ரூ.31,176 என்று விற்பனையானது. இதுதான் தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலையாக கருதப்பட்டது. அதன் பிறகு தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமான போக்கு காணப்பட்டது. இந்நிலையில் கடந்த 25ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.30,896க்கும், 27ம் தேதி ரூ.31,056, 28ம் தேதி ரூ.31,000 என்றும் தங்கம் விற்பனையானது. 29ம் தேதிஒரு கிராம் ரூ.3,856க்கும், சவரன் ரூ.30,848 என்றும் விலை குறைந்தது. இந்த விலை குறைவு ஒரு நாள் கூட நீட்டிக்கவில்லை.
நேற்று மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதாவது, கிராமுக்கு 35 அதிகரித்து ஒரு கிராம் ரூ.3,891க்கும், சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ஒரு சவரன் ரூ.31,128க்கும் விற்கப்பட்டது. மீண்டும் தங்கம் விலை சவரன் 31 ஆயிரத்தை தாண்டியுள்ளது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த மாதத்தில் திருமணம் உள்ளிட்ட அதிக விசேஷ தினங்கள் வருகிறது. இந்த நேரத்தில் தங்கம் விலை உயர்ந்து வருவது பெற்றோர்களை கவலையடைய செய்துள்ளது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து, ரூ.31,040 ஆக விற்பனையாகி வருகிறது.