https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/31/original/ops.jpg

அண்ணா பல்கலை மூலம் தேர்வு: பணி நியமன ஆணைகளை வழங்கினார் ஓ. பன்னீர்செல்வம்

by

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய போட்டித் தேர்வு மூலம் தேர்வானவர்கள் உட்பட 27 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (31.01.2020) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் மூலம் நடத்தப்பட்ட போட்டித்தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உதவி பொறியாளர் , ஒரு நில அளவையர், மூன்று இளநிலை வரைவு அலுவலர்கள், 13- இளநிலை உதவியாளர்கள், இரண்டு தட்டச்சர்கள், கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ள இரண்டு நபர்கள் உள்ளிட்ட மொத்தம் 22 நபர்களுக்கும், நகர் ஊரமைப்பு துறையில், டி.என்.பி.எஸ்.சி மூலம் வரைவாளர் நிலை-III பதவிக்கு புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஐந்து நபர்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் வீட்டுவசதி வாரியத் தலைவர் பி.கே.வைரமுத்து, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன், நகர் ஊரமைப்பு இயக்குநர் சந்திரசேகர் சாகமூரி, வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குநர் பி.முருகேஷ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!