https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/31/original/pdy.jpg

புதுச்சேரியில் காங்கிரஸ் பிரமுகர்  வெடிகுண்டு வீசி கொலை

by

புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரஸ் பிரமுகர் சாம்பசிவம் காரில்  சென்ற போது வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரி பிள்ளையார்குப்பம் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் சாம்பசிவம். இவர் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக உறவினர்கள் வீட்டிற்கு காரில் சென்றுகொண்டிருந்த போது கிருமாம்பாக்கம் அரசுப்பள்ளி அருகே மர்மநபர்கள் வெடிகுண்டு வீடியுள்ளனர். இதில் காரில் இருந்த குதித்து தப்பியோடிவரை மர்மநபர்களை விரட்டிச் சென்று அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் சாம்பசிவம் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!