https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/6/original/bcci_99.jpg

இந்திய ஏ அணி பந்துவீச்சாளர்களைச் சோர்வடைய வைத்த நியூஸி. ஏ அணி பேட்ஸ்மேன்கள்!

by

இந்தியா ஏ -நியூஸிலாந்து ஏ அணிகளுக்கு இடையிலான அதிகாரபூர்வமற்ற நான்கு நாள் டெஸ்ட் ஆட்டம், கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது.

இந்திய ஏ அணி முதல் இன்னிங்ஸில் 216 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து விளையாடிய நியூஸிலாந்து ஏ அணி, 2-ம் நாளின் முடிவில் 114 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 385 ரன்கள் குவித்துள்ளது. இதுவரை விளையாடியுள்ள ஏழு பேட்ஸ்மேன்களில் ஒரு பேட்ஸ்மேன் மட்டுமே 4 ரன்களில் வெளியேறினார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஓரளவு நிலைத்து நின்று அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். எனினும் 176 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய ஏ அணி அதற்குப் பிறகு தடுமாறியது. 6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சேப்மேனும் விக்கெட் கீப்பர் கிளவரும் நன்கு விளையாடி இந்தியப் பந்துவீச்சாளர்களைச் சோர்வடையச் செய்தார்கள். 2-ம் நாளின் கடைசி வரை இந்த ஜோடியைப் பிரிக்க முடியாமல் போனது. சேப்மேன் 85 ரன்களும் கிளவர் 111 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்கள்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!