https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/20/original/rape.jpg
கோப்புப் படம்

5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை

by

தில்லியில் 2013-ஆம் ஆண்டில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து "போக்úஸா' நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

 ஏற்கெனவே இந்த வழக்கில் கடந்த ஜனவரி 18-ஆம் தேதி இருவரையும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்திருந்தது.

 அப்போது, குற்றவாளிகள் மனோஜ் ஷா, பிரதீப் குமார் ஆகியோருக்கு விதிக்கப்படும் தண்டனை குறித்து வரும் 30-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி நரேஷ் குமார் மல்ஹோத்ரா தெரிவித்திருந்தார்.

 அதன்படி, நீதிபதி வியாழக்கிழமை வழங்கிய 100 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பில், "குற்றவாளிகள் இருவருக்கும் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது.

 பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.11 லட்சம் இழப்பீடு அளிக்கப்பட வேண்டும். 5 வயது நிரம்பிய சிறுமிக்கு நேர்ந்த துன்பம் மிக கொடூரமானது.

 இந்த வழக்கு ஒட்டுமொத்த சமூகத்தின் மனசாட்சியையும் உலுக்குவதாக உள்ளது' என குறிப்பிட்டுள்ளார்.

 கிழக்கு தில்லியின் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த அந்தச் சிறுமியை, மனோஜ் ஷாவும் பிரதீப் குமாரும் 2013, ஏப்ரல் 15-ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்தனர்.

 மேலும், சிறுமியை கொடூரமாக தாக்கினர். பின்னர், சிறுமி இறந்துவிட்டதாக நினைத்து, இருவரும் தப்பியோடிவிட்டனர்.

 சுமார் 40 மணி நேரம் கழித்து சிறுமி மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 இச்சம்பவம் தொடர்பாக, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் (போக்úஸா) தில்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

 இது தொடர்பாக பிகார் மாநிலம், முஸாஃபர்பூரில் மனோஜ் ஷாவையும், பிரதீப் குமாரையும் போலீஸார் தனித்தனியாக கைது செய்தனர். இந்த வழக்கில் 2013, மே 24-ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
 அதே ஆண்டு ஜூலையில் இருவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டன.

 பின்னர், 57 அரசு தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில், போக்úஸா நீதிமன்றம் இருவரையும் குற்றவாளிகள் என அறிவித்து தீர்ப்பளித்திருந்தது.

 23 வயது துணை மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிய சம்பவத்திற்கு பிறகு நான்கு மாதங்களில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இதனிடையே, 5 வயது சிறுமி வழக்கில் தொடர்புடைய பிரதீப் குமார், தான் கைதான போது சிறார் வயதுப் பிரிவில் இருந்ததாக நீதிமன்றத்தில் மனு அளித்தார்.

 இந்த வழக்கை விசாரித்த சிறார் நீதிமன்றம், அவருக்கு 2017 ஜூனில் ஜாமீன் அளித்தது. இதற்கு எதிராக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

 அந்த வழக்கில் குமார் சிறார் அல்ல என உத்தரவிட்ட நீதிமன்றம், அவரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு அனுப்ப உத்தரவிட்டது.

 பாதிக்கப்பட்ட சிறுமியின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் எச்.எஸ். பூல்கா, "குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் வகையில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளேன்' என்றார்.
 
 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!