
ஆந்திரத்தில் இருந்து கேரளத்துக்கு கடத்த இருந்த 120 கிலோ கஞ்சா பறிமுதல்
by DINவிசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலத்தில் இருந்து கேரளத்துக்கு கடத்த இருந்த 120 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அனகபள்ளியில் இருந்து கேரளத்துக்கு கஞ்சா கடத்த இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அனகபள்ளியில் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.
அப்போது சந்தேகத்துக்குரிய 2 பேர் பிடித்து விசாரணை நடத்திய போது அவர்களிடம் இருந்த 120 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். அவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.