http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_29_Jan_922298610210419.jpg

நடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ், திமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி: டெல்லியில் நடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ், திமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை காப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெற்று வருகிறது. குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய மக்கள் பதிவேடுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.