https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/20/original/Gun-weapon_.jpg

ஆவடி கனரக வாகனத் தொழிற்சாலையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

by

ஆவடி கனரக வாகனத் தொழிற்சாலையில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு இடையே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மோதல் காரணமாக நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

சென்னையை அடுத்துள்ள ஆவடியில் உள்ள கனரக வாகனத் தொழிற்சாலையில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு இடையே வெள்ளிக்கிழமை மோதல் ஏற்பட்டது. மோதல் முற்றியதில் பணிமாற்றம் செய்ய வந்த ஊழியர் சின்ஹா, சக ஊழியர் கிரிஜேஷ் குமார் மீது சரமாரித் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் இமாச்சாலப்பிரதேசத்தை சேர்ந்த கிரிஜேஷ் குமார் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. இதனால் அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!