https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/31/original/up.jpg

உ.பி: பிணைக்கைதிகளாக இருந்த 23 குழந்தைகள் மீட்பு: சிறைப்பிடிக்கப்பட்டவர் சுட்டுக்  கொலை

by

ஃபரூகாபாத்: உத்திரப் பிரதேசத்தில் ஒன்பது மணி நேரத்திற்கு மேலாக 23 குழந்தைகளை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தவரை போலீஸார் சுட்டு வீழ்த்திவிட்டு குழந்தைகள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் ஃபரூக்காபாத் மாவட்டம் கசாரியா கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் பாதம். இவர் கொலை வழக்கு ஒன்றில் சிறை சென்று ஜாமீனில் வெளியே வந்துள்ளார் நேற்று தனது மகளுக்கு பிறந்த நாள் விழா கொண்டுவதற்காக அருகில் இருந்த குழந்தைகளை அழைத்துள்ளார். அதன்படி மாலையில் அவரது வீட்டிற்கு  சுமார் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அவர்களில் 23 குழந்தைகளை துப்பாக்கி முனையில் சிறைப்பித்து வைத்துள்ளார். 

தகவல் அறிந்ததும் கிராமத்தினர் சிலர் கதவைத் திறக்க முயன்றபோது, அவர்களை நோக்கி உள்ளே இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். அதில் ஒருவர் காலில் காயமடைந்தார்.  வீட்டின் ஜன்னல் வழியாக குறைந்த திறன்கொண்ட குண்டையும் வீசியுள்ளார். இதனால் அந்த கிராம மக்கள் பதற்றம் அடைந்தனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் குகழந்தைகளை பிடித்து வைத்துள்ளவர் சுபாஷ் பாதம் என அடையாளம் கொண்டனர். பின்னர் அவரை போலீஸார் சமாதானப்படுத்தினர். ஆனால், சுபாஷ்  போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுள்ளார். அதில் போலீஸார் 2 பேர் காயமடைந்தனர். 

இந்த நிலையில் தேசிய பாதுகாப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர். பின்னர், பாதுகாப்புப் படையினரும், போலீஸாரும் சேர்ந்து நடத்திய துப்பாக்கிச் சுட்டில் சுபாஷ் கொல்லப்பட்டார்.  சுமார் 9 மணி நேர மீட்பு நடவடிக்கைக்கு பின்னர் 23 குழந்தைகளையும் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

23 குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்ட செய்தி அறிந்து பெற்றோர்கள் நிம்மதி அடைந்தனர். 

சம்பவம் குறித்து போலீஸார் கூறியதாவது: குழந்தைகள் மீட்பு தொடர்பாக பேசுகையில் எங்களிடம் எந்தவித கோரிக்கையும் வைக்க வில்லை. அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம். இந்த துப்பாக்கிச் சூட்டில் அவரது மனைவியும் காயமடைந்துள்ளார் என்று தெரிவித்தனர். 

23 குழந்தைகளையும் பத்திரமாக மீட்ட போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு பாராட்டு அரசு பாராட்டு தெரிவித்துள்ளது. 

பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 23 குழந்தைகளையும் மீட்ட போலீஸாருக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகை அறிவித்துள்ளது உத்திரப் பிரதேச அரசு. 

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சுபாஷ் பாதாம் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று ஏடிஜி யுபி ராமசாஸ்திரி உறுதிப்படுத்தியுள்ளார். 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!